இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்யும் உண்மை நிகழ்ச்சி! யூதப் படுகொலை, நாஜிக்களால்!
பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் யூதர் உள்ளிட்ட அனைத்து மக்களையும் போலந்து நாட்டிற்க்குக் கொண்டு வந்து சேர்த்த ரயில் பாதையயும், அது, போலந்துக்குள் கொண்டு சென்ற வளாகத்தின் நுழைவு வாயிலையும் படத்தில் பார்க்கின்றோம்.
இரண்டாம் உலகப்போரின் போது, பெல்ஜியம், பிரான்ஸ்,கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, மற்றும் மேற்கு, கிழக்கு ஐரோப்பியப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களைக் கொலை செய்யும் நோக்குடன் புகைவண்டி மூலமாக போலந்தில் உள்ள ஒஸ்விசிம் என்ற இடத்தில் அமைக்கப் பட்ட நாஜிக்களின் முகாமுக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் கூட்டத்தைத் தான் படத்தில் பார்க்கின்றோம்.
மக்கள் கூட்டத்தில் ஆடவரும் மகளிரும் தனிதனியாகப் பிரிக்கப் பட்டனர். பெண்களிடமிருந்த குழந்தைகள் தனிமைப் படுத்தப் பட்டனர். முதியோர்கள் ஆடுமாடுகளைப்போல் விரட்டப் பட்டனர். நோயுற்றவர்கள், ஊனமுற்றவர்கள் குப்பை கூளங்களப்போல் பெட்டி படுக்கைகளுடன் தூக்கியெறியப் பட்டனர். இவ்வாறாகப் பிரிக்கப்பட்டவர்கள் விஷவாயு நிறையப்பெற்ற அறைகளுக்குள் அணிஅணியாக அனுப்பப் பட்டு சாகடிக்கப் பட்டனர். இறந்தோர் புதைக்கப்பட்ட பகுதி படத்தில் உள்ளது.
90% யூதர்கள், 10% போல்ஸ், சோவியத் கைதிகள் சிலர், சின்டி ரோமா, ஜொஹுவா சாட்சிகள், ஹொமோசெக்சுவல்ஸ் சிலர் ஆக மொத்தம் 1.3 மில்லியன் முதல் 1.5 மில்லியன் வரையிலான் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படி நடந்திருக்குமா என்பதற்கு அண்மைக்கால இலங்கையே சாட்சி. மேலும் இணையத்தில் பொதுமக்கள் படங்கள் விரவிக் கிடக்கின்றன்.
வழிமறைக்கப்பட்ட வேலிகளயும், நுழைவாயிலாகக் காணப்படும் இரும்புக் கதவுகளையும் படங்களில் காணலாம். 5 மீட்டர் நீளமும், 40 கிலோ எடையும் கொண்ட இரும்புக் கதவுகள் திருட்டுப் போனதும். அதை அனத்து ஊடகங்களும் "கேட்" படத்துடன் பிரசுரித்ததுமே இந்த பதிவுக்குக் காரணம். இவ்றைப் பார்த்ததிலிருந்து கூடவே இருந்து அவஸ்தப்பட்ட உணர்வும், நடுக்கமும், உறக்கமின்மையும் தொடர்கதையாய்விட்டது. இப்பொழுது நேரம் இரவு 12.20மணி.
நாஜிக்களின் இந்தக் கொடூரச் செயலுக்குச் சாட்சியங்களாகத் திகழ்ந்த சிலரது பேட்டிகளும், 56 பக்கங்களில் 193 புகைப்படங்களும் இணையத்தில் காணக் கிடக்கின்றன. பார்க்கும் மனோதிடம் எத்தனை பேருக்கு இருக்கும் என்று தெரியவில்லை.
ஒரே விரலில் எழுத்தைப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு எழுத்தாகத்தான் கணினியில் என்னால் எழுத இயலும்.ஏனெனில்,எனக்கு தட்டச்சு தெரியாது. அழகி மென்பொருள் அறிமுகத்தால்தான் வலைப்பூ ஆசையே வந்தது. கண்களில் வடியும் நீருடன் இணைந்தே பணி தொடர்கின்றது. ஒரே ஒருவரது பேட்டி:-
"சாவறைக்குச் செல்லுமுன் என்னை அழைத்த அன்னை,லெபெலி நான் இனி உன்னைப் பார்க்க முடியாது. சகோதரனை நன்கு கவனித்துக் கொள்" என்று சொல்லிச் சென்று விட்டார்.
1939-ல் போலந்தை ஜெர்மானியர்கள் கைப்பற்றினர்.லெபலி என்கிற லியோ தன் குடும்பத்தவருடன் யூனிபார்ம் பேக்டரியில் டெயிலராக வேலை பார்க்க நேர்ந்தது. அங்கிருந்து கிராஸ்-ரோசன் கேம்புக்கு அனுப்பப் பட்டார். சோவியத் ஆர்மி வந்ததால் கைதிகளை ஆஸ்திரியாவிற்கு அனுப்பிவைத்தனர். 1945-ல் விடுதலையானார்.
1933-1945 6 மில்லியன் பேர் ஐரோப்பாவில் கொல்லப்பட்டதாகத் தகவல்.ஜாலியன்வாலாபாக் போன்று பன்மடங்காகாக போலந்துப் பெருங்களப் பலியைக் கொள்ளலாம். இது நடந்த இடத்தின் பேராலே, 1950-களிலே, HOLOCAVST-என்ற புதிய ஆங்கில வார்த்தையே
உருவாகிவிட்டது. அதற்கு பெருங்களப் பலி அல்லது படுகொலை அல்லது தீயினால் ஏற்படும் பெருவிபத்து என்று அகராதி விளக்கம் தருகின்றது.
அந்த இடத்தைப் பார்வையிட நாள்தோறும் லட்சக் கணக்கானவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
http://www1.yadvashem.org/exhibitions/album_auschwitz/index.html?WT.mc_id=ggcamp&WT.srch=1
http://news.bbc.co.uk/2/hi/europe/8421787.stm
http://isurvived.org/AUSCHWITZ_TheCamp.html
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள முதல் படத்தின் வலது புறம் உள்ள கதவின் வழியாகத்தான் விஷ வாயு அறைக்குள் செலுத்தப்படும். இந்தப் படம் கிடைத்தவுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.