தெலிங்கானா சரியென்றால், எல்லாமே சரிதான்! மாற்று வழி என்ன?
சென்னை ராஜதானியைத் தமிழ்நாடாக மாற்றிட உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்க நாடார் உயிரை விட்டார். பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். ஆந்திரம் பிறந்தது; மொழிவழி மாகாணங்கள் அமைந்திடக் காரணியானது பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணம்!
11 நாட்கள் உண்ணாவிரதமிருந்த , ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திர சேகர ராவ் உயிர் ஒருவாறு காப்பாற்றப் பட்டுவிட்து. "தெலிங்கானா" கொள்கையளவில் மத்திய அரசு ஒப்புக் கொண்டதால்! கட்சிக் கூட்டணிகள் அமைக்கும் பொழுது கூட கொள்கையளவி்ல் ஒப்புக்கொள்ளப்பட்டதெல்லாம் இப்பொழுது யாருக்கும் நினவுக்கு வரக் கூடது. "ஞாபக மறதி தேசீய வியாதி"-கமல் வசனம். உ.ஒருவன்.
நாட்டின் எல்லாப் பகுதிகளும் 1947-2009= சரிசமமாகச் சகல துறைகளிலும் கவனிக்கப் பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?
எந்தப் பதவியையுமே ஓரிரு தடவைகளுக்கு மேல் வகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப் பட்டிருந்தால் இந்த்ச் சிக்கல் தோன்றியிருக்குமா?
ஒருவர் மண்டயைப் போட்டால்தான் அடுத்தவர் பதவிக்கு வர முடியும் என்ற அவல நிலைமைதானே இந்தச் சீரழிவிற்குக் காரணம்?
தேர்தல் முறையில் மாற்றமும், பதவி வகித்திடக் கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படாதவரைத் தனி மாநிலங்கள் உருவாவதை எந்தச் சக்தியும் தடுக்க முடியாது.
விகிதாச்சரப் பிரநிதித்துவத் தேர்தல் முறை அமுலுக்கு் வர வேண்டும்! த்னி மனிதர்கள் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டிய நிலைமை மாறிவிடும்.. கட்சிச் சின்னங்களின் பேரிலேயே வாக்குகள் சேகரமாகும். இந்த அளவிற்கு போட்டி/பொறாமை இருக்காது. விகிதாச்சார அடிப்படையில் கட்சிக்கான பிரதிநி்திகளின் எண்ணிக்கையைத் தேர்தல் தீர்மானிக்கும். தேவையான MLA/MP-க்களைக் கட்சிகள் அனுப்புவிக்கும். தகுதியும் திறமையும் உடைய கட்சிக்காரரை கட்சித் தலைமை புறக்கணித்திடவும் முடியாது.
கர்நாடகத்திலிருந்து கூர்க்,
குஜராத்திலிருந்து சௌராஷ்ட்ரா, பீஹாரிலிருந்து மிதிலாஞ்ச்சல் பி்ரிக்கப்பட்டுப் புதிய மாநிலம் உருவாக்கக் கோரிக்கை,
மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங்க் மற்றுமுள்ள பகுதிகளக் கொண்டு கோர்க்காலந்து்,
உ.பி- மற்றும் ம.பி.-யில் உள்ள பண்டா,சித்ரகூட்,ஜான்சி,லலித்பூர், சாகர் உள்ளடக்கிய பண்டல்கண்ட் புதிய மாநில்ம்.,
கிழக்கு உ.பி, மற்றும் பீஹாரை உள்ளடக்கிய சில பகுதிகளை இணைத்துப் புதிய மாநிலம்
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மிகுதியாகவுள்ள பகுதிகளைக் கொண்ட ஹரித்/கி்ஷான் பிரதேசம்,
மகாராஷ்டிரத்திலிருந்து விதர்பா, வடக்கு பீஹாரின் சில பகுதிகளைக் கொண்ட மிதிலா/ மிதிலாஞ்சல்,
மேற்கு வங்கம் மற்றும் சில பகுதிகளை உள்ளடக்கிய கூச்பிஹார்-என்றவாராகப் பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் கோரிக்க்கைகளாய் உள்ளன.
தள்ளிப் போடாமல் முடிவெடுங்கள். சின்னக் சின்னக் கோளாறுகள் உடனுக்குடன் தீர்க்காவிட்டால், மேஜர் ஆபரேஷன் தேவைப்படக்கூடும்!
sourcs:thina mani 11-12-2009
"சென்னை ராஜதானியைத் தமிழ்நாடாக மாற்றிட உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்க நாடார் உயிரை வி்ட்ட பின்னர்தான் சென்னை தனியாகப் பிரிக்கப் பட்டது."
ReplyDeleteமேலுள்ள வரி தவறு. பொட்டி சீராமுலு உயிர்விட்டபின் ஆந்திரா உண்டானது. சங்கரலிங்க நாடார் உயிர்விட்டு ஒன்றும் நடக்கவில்லை; உப்புக்கும் பிரயொசனமில்லை.
தெரியாமல் எழுதாதீர்.
தாங்கள் சொல்வது சரிதான்! பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்திற்குப் பின்னர்தான் மொழிவழி மாகாணங்கள் தோன்றும் நிலயை நேரு மேற்கொண்டார். மொழிப் பற்று மனிதத்தின் மாண்பைச் சீர்குலைத்தது. தமிழகம் இழந்த எல்லைப் பகுதிகள் ஏராளம். சங்கரலிங்க நாடாரின் உயிரைக் காக்கும் முயற்சிகள் சரியான முறையில் மேற்கொள்ளப் படவில்லை.
ReplyDeleteஸ்ரீராமுலுவின் பெயரை விட்டுவிடவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இது போன்று மாநிலங்கள் பிரிக்கப் படுவதற்கான காரணங்களிலேயே கவனம் சென்றதால் ஏற்பட்ட தவறு இது. இடுகையிலும் அவர் பெயர் சேக்கப்பட்டு விடும்.
மொழி வழி மாகணங்கள் தோன்றாமல் இருந்திருந்தால் மக்களிடம் சேர்ந்து வாழும் எண்ணம் தொடர்ந்திருக்கும்.
நன்றி.
//நாட்டின் எல்லாப் பகுதிகளும் 1947-2009= சரிசமமாகச் சகல துறைகளிலும் கவனிக்கப் பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?
ReplyDeleteஎந்தப் பதவியையுமே ஓரிரு தடவைகளுக்கு மேல் வகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப் பட்டிருந்தால் இந்த்ச் சிக்கல் தோன்றியிருக்குமா?
ஒருவர் மண்டயைப் போட்டால்தான் அடுத்தவர் பதவிக்கு வர முடியும் என்ற அவல நிலைமைதானே இந்தச் சீரழிவிற்குக் காரணம்?
தேர்தல் முறையில் மாற்றமும், பதவி வகித்திடக் கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படாதவரைத் தனி மாநிலங்கள் உருவாவதை எந்தச் சக்தியும் தடுக்க முடியாது.//
100 % சரி .ஆனால் மாற்றம் எப்போது ஏற்படும் என்றுதான் தெரியவில்லை.