கேரளவிலிருந்து சுதா உதய குமார் மற்றும் அவர்த குடும்பத்தினர் கள் அம்பத்தூருக்குத் திரும்பினர். அம்பத்தூர் ரயிநிலையத்திலிருந்து சத்யா நகருக்கு ஆட்டோவில் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிற்குதான் நகைகளடங்கிய கைப்பையை ஆட்டோவில் தவற விட்டது தெரி்ய வந்தது. அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.
ஆட்டோ டிரைவரின் அடுத்த சவாரி பள்ளிக் குழந்தைகள்! குழந்தகளை ஏற்றும் பொழுது பின் சீட்டில் ஓர் கைப்பயைக் கண்டார். அந்தப் பையினைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 3.5 லட்சம் மதிப்புள்ள நகைகளும் , இதர பொருட்களும் அப்படியே இருந்தன. 10 ஆண்டுகளுக்குமேல் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகின்றார். இத்தகைய இதுதான் முதல் முறை.
ஆட்டோ ஓட்டுநர் சத்திய நாராயணனை, புறநகர்க் காவல் அதிகாரி, எஸ்.ஆர்.ஜ்ங்கிட்டின் பாராட்டப் பெற்றார்.
சத்தியநாரயணன் என்ற அம்பத்தூர் ஆட்டோ டிரைவரின் நேர்மைத் திறத்தைப் போற்றிப் புகழ்வோம்! இத்தகையவர்களால்தான் உலகம் வாழ்கின்றது.
சத்யா நீடுழி வாழ்க!
Friday, December 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.