Friday, December 11, 2009

அமெரி்க்க அதிபருக்கு அமைதிக்கான் நோபல் பரிசு!



"உலக அமைதிக்கான முயற்சியில் இப்பொழுதுதான் நான் காலடியெடுத்து வைத்துள்ளேன். தீவிரவாதத்திற்கு எதிராக உலகில் உள்ள இரு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா போராடி வருகின்றது. ஆப்கானிஸ்தானில் விரைவில் போரை முடிவிற்குக் கொண்டுவரும் நடவடிக்கையாக 30000-ம் அமெரிக்கத் துருப்புக்களை அங்கு அனுப்புவது குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டேன்.

நாம் பெரிய சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளதால் போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான எந்தத் தீர்வையும் உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. எனினும் உலகில் அமைதியை நி்லைநாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா விரைந்து எடுக்கும் என்றார்"

நார்வே தலைநகரில், ஆஸ்லோவில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009-க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பெற்றது. விருதை ஏறுக்கொண்டபின் ஒபாமா பேசியதுதான் மேலே குறிப்பிடப் பட்டுள்ளவை.

அமைதிக்கான விருதைப் பெறும் அமெரிக்காவின் 4-வது அதிபர் என்பது குறிப்பி்டத் தக்கது.

பரிசுக்குரியவர்கள் எதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகின்றார்கள் என்பதே ஓர் புதிர்!
source: தினமணி-11-12-2009

0 comments:

Post a Comment

Kindly post a comment.