சீனாவிற்குச் செல்ல காஷ்மீர் மக்களின் புதிய தந்திரம்!
போர்ச்சுக்கல் 1987-ஆம் ஆண்டில் ஏற்படுத்திக்கொண்ட கூட்டு அறிக்கையின்படி, தன்வசமிருந்த MACAU தீவினை 1999 ஆம் ஆண்டு சீனாவிற்குக் கொடுத்து விட்டது. அந்த நிகழ்வினைத்தான் இடப் புறத்தில் உள்ள படம் காட்டுகின்றது.
10 ஆண்டு நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. சீன அதிபரும், தீவின் தலைமை அதிகாரியும் விழாவில் பங்கேற்றனர்.
காஷ்மீர் மக்கள் சீனாவிற்குச் செல்ல விரும்பினால், தனித் தாளிலேய முத்திரை பதித்து அனுமதி வழங்கும் முறையினையே சீனா பின்பற்றுகிறது. இதன் மூலம் ஜம்மு-கஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்ற தோற்றத்தை சீனா ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனால் கஷ்மீரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள், ஹாங்ஹாங் அல்லது மக்காவ் பகுதிக்குச் சென்று, தனித் தாளில் முத்திரை பெற்று சீனா சென்று வருவது தற்பொழுது தெரிய வந்துள்ளது.
இதனால், ஹாங்காங் அல்லது மக்காவுக்குச் செல்லும், அல்லது அங்கிருந்து திரும்பும் இந்தியர்களின் பாஸ்போர்ட், விசா ஆவணங்களை முழுமையாக அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள குடியேற்றப் பிரிவு அதிகாரிகளிக்கு இந்திய உள்துறை அமச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உத்வி: தின மணி,21,டிசம்பர்,2009.
0 comments:
Post a Comment
Kindly post a comment.