UK-ல் உள்ள மிகப் பிரமாண்டமான St. PANCRAS INTER NATIONAL- என்று அழைக்கப் படுகின்ற ரயில்வே நிலையத்தின் வெளிப்புறத் தோற்றத்தைப் படத்தில் பார்க்கின்றோம். இதன் மேல் மாடியில் மிட்லேண்ட் ஹோட்டல் உள்ளது.
St. Pancras இண்டர் நேஷனல் ரயில்வே நிலையத்தின் உட்புறத் தோற்றமே இது.
வரலாறு காணாத பனியில் சிக்கிக் கொண்ட 2000-க்கும் மேற்பட்ட பயணிகளைப் 16 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி ரயில் பெட்டிகளை உடைத்துக் கயற்றின் மூலம் காப்பாற்றப்பட்ட காட்சிக்குரிய சூழல்..
என்ன நடக்கும் என்பது தெரியாமல் ஆழ்ந்த துயரம் நிறைந்த குழப்பமான மன நிலயில் காத்திருக்கும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.இது போன்று 15-க்கும் மேற்பட்ட படங்களை இணையத்தில் காணமுடிகின்றது.
26000-ம் பேர்கள் மட்டுமே ஒருதடவையில் பயணம் செய்ய இயலும். எப்பொழுது பயணம் துவங்கும் அல்லது ரயில்கள் ஓட ஆரம்பிக்கும் என்று யாருக்கும் தெரியாது. நிர்வாகத்தாலும் சரியான பதிலைக் கூறிட இயலாது.
இயற்கையை மனிதன் வென்று விட்டதாகக் கருதலாமே தவிர உண்மையில் இயற்கைதான் ஜெயித்துக் கொண்டே இருக்கிறது. நல்ல வேளை சுனாமி போன்ற பேரழிவுக்கு ஆளாகிவிடாமல் ரயில்வே நிலையத்தில்தான் காத்துக் கிடக்கின்றார்கள் என்பதை நினைத்து அமைதி அடையலாம்.
நிலைமை சீரடையும் வரை புதிதாக டிக்கட்டுக்கள் வழங்கப்பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
1870-ஆம் ஆண்டிலிருந்து இந்த ரயில்நிலையம் இயங்கி வருகின்றது. அதன் புதுப்பிக்கப்பட தோற்றத்தையே நாம் இங்கே காண்கிறோம்.
http://www.thisislondon.co.uk/standard/article-23786532
நன்றி: லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட்
0 comments:
Post a Comment
Kindly post a comment.