சிகப்பு விளக்கு அங்கீகாரம்! உச்ச நீதி மன்றம் அதிரடி ஆலோசனை!
விபசாரத்தைத் தடுக்க முடியாவிட்டால் சட்ட அங்கீகாரம் கொடுங்கள்!
மத்திய அரசிடம் உச்ச நீதி மன்றம் இவ்வாறு கூறி உள்ளது.
விபச்சாரத்திற்காகக் குழந்தைகள் கடத்தப் படு்வது தொடர்பாக சமூக நல அமைப்பு மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்திருந்தது. இந்த பொது நலன் மனு புதன் கிழமை டெல்லி உச்ச நீதி மன்றத்தில் விசாரணக்கு வந்தது.
நீதிபதிகள், தல்வீர் பண்டாரி, எ. கே. பட்நாயக் இந்த மன்வை விசாரித்தனர். கடுமையான சட்டங்கள் இயற்றியும் விபச்சாரத்தைத் தடுக்க முடியவில்லை என்றால் அந்த்த் தொழிலை சட்டபூர்வமாக்கி விடக்கூடாது என வினா எழுப்பியுள்ளனர்.
சட்டபூர்வமாக்கிய பின், அந்தத் தொழிலைக் கண்காணித்தல், அதில் ஈடுபட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்குதல் போன்றவற்றை அரசு செய்யலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நன்றி: தின மணி, 10-12-2009 வியாழக் கிழமை.
0 comments:
Post a Comment
Kindly post a comment.