Thursday, December 10, 2009

அயோத்தி ராமரோடு சேர்ந்து ரத்தக் கண்ணீர் வடிக்கின்றார் போதி மரத்துப் புத்தர்?




















புத்தரின் புனிதப் பொருட்கள், 51 உலக நாடுகளில், 485 தடவைகள், கண்காட்சியாக மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டன. 1.5 மில்லியன் ஜோடிக் கண்கள், அவற்றின் அழகைப் பருகின.

2008-ல் ஜெர்மனியில் பார்க்கின்றார், ஓர், இந்தியர்! அவர் பெயர், கிரிஷ் ஸ்ரீகாந்த்! அவரது முயற்சியில், அவை, பெப்ருவரி, 19-21, 2010-ல், சென்னையிலும், மார்ச் 26-28, 2010-ல் பெங்களூரிலும் மக்கள் பார்வையிட வாய்ப்புக் கிடைக்கும் என்று எண்ணுகிறார்.

இது டைம்ஸ் ஆப் இந்தியா, 09-12-2009, புதன் கிழமை, ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி!

உலகிலேயே உயரமான 500' உயரமுடைய புத்தர் சிலையுடன், மற்றும் புத்தரின் நான்கு சீடர்கள், சாரிபுத்ரா, மௌட்கல்யானா, கொண்டானா, ஆனந்தா, மகன், ராகுலா உள்ளிட்ட 33 புனித நினைவுச் சின்னங்கள் அந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

"மைத்ரேயா திட்டக் குழு" 1990-லிருந்து செயல்படுவதாகத் தெரிகின்றது. மைத்ரேயா என்பது வடமொழிச் சொல். "disciple of saga parasara" என்ற பொருள் கணினியில் இடம் பெற்றுள்ளது. உலகளாவிய நிலையில் அமைதி-அன்பு-கருணை ஆகியவற்றிற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவதுதான் நோக்கம் என்பது அறியப்படுகின்றது.

மைத்ரேயா தி்ட்ட மொத்த மதிப்பீடு 250மில்லியன் அமெரிக்க டாலர்கள். 500' புத்தர் சிலை வடிவமப்புச் செலவினங்களை எதிர்கொள்ள திட்டக் குழு புதுமையான முறையைக் கையாண்டுள்ளது. கை, கால், (இடது-வலது தனித் தனியே) ... இந்தவிதமாக உடம்பின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு விலை வைத்து ஆதரவாளர்களைத் (ஸ்பொன்ஷர்ஷிப்-தமிழாக்கம் சரிதானா, நண்பர்களே?) தேடியுள்ளது/ திரட்டியுள்ளது.

அந்தப் படியலைத்தான் "கிடைத்தது கிடைத்தபடி" அப்படியே ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.


Head of the Maitreya Statue US$ 25 million
Left Hand of the Maitreya Statue US$ 6.5 million
Right Hand of the Maitreya Statue US$ 6.5 million
Left Foot of the Maitreya Statue US$ 5.5 million
Right Foot of the Maitreya Statue US$ 5.5 million
Left Arm of the Maitreya Statue US$ 16 million
Right Arm of the Maitreya Statue US$ 16 million
Left Leg of the Maitreya Statue US$ 20 million
Right Leg of the Maitreya Statue US$ 20 million
Left Quadrant of the Front Upper Body US$ 7 million
Right Quadrant of the Front Upper Body US$ 7 million
Left Quadrant of the Front Lower Body US$ 7 million
Right Quadrant of the Front Lower Body US$ 7 million


மைத்ரேயா திட்டக்குழுவின் முக்கியப் பங்காளி யார் என்கிறீர்களா?



Type Private
Founded 1902 (1902) (as Mott & Hay)
Headquarters Croydon
Industry Multidisciplinary consultancy
Revenue US$1.5 billion (2007)
Employees 14,500 (2008)
ebsite Mott MacDonald Group website

மேலே குறிப்பிடப் பட்டுள்ள "மோட் மேக்டொனால்டு" கம்பெனிதான்.

2500 ஆண்டுகளுக்கு முன்னர், புத்தரின் இதழ்கள் இறுதிச் சொட்டு நீர்த் துளியைச் சுவைத்த பூமி! புத்தரின் உதடுகள் இறுதியாகப் போதித்த புண்ணிய பூமி! புத்தரின் பூத உடல் எரியூட்டப்பட்ட பூமி!- -என்று கருதப்படுகின்றது, தற்போதைய உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷி்நகரம். சுற்றுலாத் தலம்! அங்கே, புத்தரின் நிர்வாணா கோவிலும் உள்ளது.

மைத்ரேயா திட்டக் குழுவினர் குஷி நகரத்தில் புத்தருக்குக் கோவில் எழுப்புவதில் அக்கறையோடுள்ளனர். அந்தக் கோவிலில், இடம்பெறப் போகும் 500' உயரமுள்ள புத்தர் சிலையைச் சுற்றிலும், ஒரு லட்சம் சிறு புத்தர் சிலைகளை வைத்திடவும் தி்ட்டமும் உள்ளது.

உலகத்திலேயே தலைசிறந்த மருத்துவமனை, அருங்காட்சியகம், ஆடியோ விஷுவல் சென்டர், பள்ளிக் கூடங்கள், நூலகங்கள் ..... இன்னும் எத்தனை எத்தனயோ வசதிகளை ஏற்படு்த்தப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தவிதமாக அந்த குஷிநகரத்தில் கல்வி, சுகாதார மேம்பாடுகளை வளர்ந்தோங்கச் செய்வதன் மூலம், சுற்றுலாவை மேம்பாடு அடையச் செய்து வருவாயைப் பெருக்கிட முடியும் என்று உத்தரப் பிரதேச அரசு உறுதியாக நம்புகின்றது.

இதற்காக, 700 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப் படுத்தும் முயற்சிகள் தொடர்வதாக மாவட்ட உயர் அதிகாரி பி.பி.உபாத்யாய் அறிவித்துள்ளார்.

இது அமுலானால் ஆண்டாண்டுக் காலமாக அரிசி, கரும்பு, கோதுமை பயிரிட்டு உயிர் வாழும் 15000-20000 கிராம மக்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகும். 7-க்கும் மேற்பட்ட கிராமஙகள் காலியாகும்.

6 குழந்தைகளையும், ஒரே ஒரு மனைவியையும் சொத்தாகக் கொண்ட, 45-வயதுடைய, ராம் பிரசாத் என்ற விவசாயி, எங்கள் உயிரின் விலை என்ன? என்ற கேள்வியை எழுப்புகின்றார்?

Kushinagar has yet to see violence related to the Maitreya Project, but anxiety over the plans remains. "I will cut them if they come here," says Kalami Devi, the demure, bespectacled head of the women's chapter of a local Save Our Land organization, as she makes a slicing motion across her neck to drive home her point.

In other words, Mr Kedge appears to be acknowledging that 60 per cent of the landowners do not wish to move. What is also problematic is that the independence of the settlement process does not appear to be guaranteed. For an outcome to be considered fair it is important that a body with no vested interests in the outcome determine whether a person's unwillingness to move is ‘bona fide' or not.

The Maitreya Project is an administrative unit within the Foundation for the Preservation of the Mahayana Tradition, or FPMT, a California based Buddhist organisation. The head of the FPMT is Lama Zopa Rinpoche, originally a Nepalese Sherpa, who as a young boy was recognised as the reincarnation of a householder yogi from Solo Kumbhu in Nepal.


‘ Indian farmers oppose giant Buddha statue', Daniel Pepper, The Christian Science Monitor, 09/10/2007, http://www.csmonitor.com/2007/0910/p06s02-wosc.html, accessed 30 September 2007. See also: ‘Giant Buddha's tough love will drive out poor', Daniel Pepper, news.scotman.com - http://news.scotsman.com/international.cfm?id=1440722007 , accessed 30 September 2007. See also: ‘Villagers Fight Plan for Giant Buddha', Daniel Pepper, 20 September, http://www.washingtontimes.com/article/20070920/FOREIGN/109200032/1003/foreign , accessed 2 October 2007.

Maitreya Project, Latest Update, September 2007, http://www.maitreyaproject.org/en/updates/ , accessed 3 October 2007.

சாலை மறியல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், உள் நாட்டு/ வெளி நாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு ஆய்வு மாணாக்கர் அறிக்கைகள் என்று பலவாறு தகவல்கள், என்று பல்வேறு முய்ற்சிகள் செய்தும் எந்தப் பலனும் இல்லை. குஷிபூர் வாழ், பாதிக்கப்பட்ட விவசாயிகள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பது கேள்விக்குறியே?

கிரீஷ் ஸ்ரீகாந்த் புத்தரின் புனிதப் பொருடகள் , தமிழ் நாடு, கர்நாடக மாநிலங்களில் ,மக்கள் பார்வைக்கு வைக்கப் படுவதாக செய்தி அறிவிவித்ததன் மூலம்தான் இஃது வெளிச்சத்திற்கு வந்தது. இச்செயல் மூலம் இந்திய மக்களின் நாடித் துடிப்பை யாராவது அறிய முற்படுகின்றார்களோ என்ற ஐயப்பாடும் தோன்றுகின்றது.

Related Links

Questioning The Maitreya Project: What would the Buddha do?', by Jessica Maria Falcone, read more

‘Villagers Fight Plan for Giant Buddha', Daniel Pepper, 20 September, more

Maitreya Project, Latest Update, September 2007,

World peace must develop from inner peace. Peace is not just the absence of violence. Peace is the manifestation of human compassion."
— His Holiness the Dalai Lama


விவசாயிகளின் வயிற்றில் அடித்து அவர்கள் வாழ்க்கையைத் துவம்சம் செய்து அந்த அஸ்திவாரத்தின் மீது எழுப்பப் படும் பௌத்த மடாலயத்தை , தீயதைப் பேசாதே/ கேட்காதே/ பார்க்காதே என்று போதித்த போதிசத்துவரே ஏற்றுக் கொள்வாரா?

உலக அமைதி என்பது உள்ளத்துள்ளே இருந்து வர வேண்டும். என இந்தியாவிலிருந்து கொண்டே உபதேசித்தருளும் தலாய்லாமாவுக்குத் தெரியாமலா இவ்வளவும் நடக்கும்?

அந்நிய பூமியில் தலைமை நிர்வாகிகளை வைத்துக் கொண்டு அனைத்துலக ரீதியில் இயங்கிவருகின்ற - அன்பு, கருணை, அமைதி இவற்றிற்காகவும், மக்களின் சுபிட்ஷமான வாழ்க்கைக்காகவும் செயல்படுவதாகக் கொள்கைப் பிரக்டனம் செய்துள்ள மைத்ரேயி ப்ராஷக்ட்ராரின் உண்மையான நோக்கம்தான் என்ன?

வெளிநாட்டு பகாசுர வியாபாரக் க்ம்பெனிக்குப் புத்தரின் சிலைதனைக் கோடிக்கணக்கான டாலர் செலவில் செய்வித்து, உலகை வலம் வரச் செய்வதன் காரணம் என்ன? விவசாய நிலத்தைக் கபளீகரம் செய்வதில் உ.பி. அரசும் ரகசியமாகவும், பகிரங்கமாகவும் ஈடுபடக் காரணம் என்ன்? விவசாயிகளையும் போராட்டக்காரர்களையும் அச்சுறுத்த வேண்டிய அவசியம்தான் என்ன?

பிணி, மூப்பு, சாக்காடு இவற்றைக் கண்டு மன்ம் பொறாமல், கண்ணீர் சிந்திக் கட்டிய மனைவியையும், பெற்ற மகனையும், அரண்மனை சுகபோகங்களையும் துறந்து உண்மையறிய காட்டிற்குச் சென்று கடுந்தவம் மேற்கொண்டு கௌதம புத்தரான சித்தார்த்தருக்கு் இவ்வளவு ஆடம்பரங்கள் தேவைதானா?

0 comments:

Post a Comment

Kindly post a comment.