வாய்ப்புகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! படம் ஜி.போஸ்ட்-உதவி
தெரிந்தவர்களுக்கு எல்லாமே பழசு! தெரியாதவர்களுக்கு எல்லாமே புதுசு!
எல்லோரிடமுமே பழசும் உண்டு! புதுசும் உண்டு! எனவே ஆர்வமுள்ள துறைகளில் ஆழ உழுவது வெற்றிக்குக் கை கொடுக்கும். வாய்ப்புக்கள் பல உள்ளன.
அண்மைக்கால உதாரணம். சென்னைப் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்து வருபவர் ஆனைவாரி ஸ்ரீதர், என்னும் துடிப்புள்ள இளைஞர். சிற்சில குறும்படங்களையும், விளம்பரப் படங்களையும் எடுத்த அனுபவசாலி. ஓர் தயாரிப்பாளருக்கு இவரது கதை பிடித்துப் போனது. உருவானது, "வேடப்பன்." குறைந்த பட்ஜெட் படங்களில் அது சோடை போகவில்லை. தற்போது, பலரது பார்வையும் ஸ்ரீதர் மீ்து! அடுத்த படத்திற்கான முயற்சிகளையும் தொடங்கி விட்டார்!
டிசம்பர் 25 முதல்-25 -2009 வரை, கிருஷ்ணகிரியில், குறும்படப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க விரும்புவோருக்கு, அதற்கு முன் பங்கு பெற்றவர்களின் அனுபவங்களைத் தெரிவித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினேன்.
தேடினேன்; கிடைத்தது ; நிழல் என்னும் இரு மாத இதழ் ! ஐந்து ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்றது. தனி இதழ் விலை ரூபாய் 30/- ஆண்டுச் சந்தா ரூபாய் 200/-. ஆசிரியர், ப.திருநாவுக்கரசு. E-mail: nizhal_2001@yahoo.co.in
6- வது ஆண்டில் பீடு நடை போடுகின்றது நி்ழல் .அட்டையையும் சேர்த்து 60 பக்கங்கள். 32-வது இதழிலிருந்து சில குறிப்புக்கள்:
எடுத்தவுடன் புரட்டிப் பார்க்க வைக்கும் அட்டகாசமான வடிவமைப்பு. லட்சுமி காந்தன் கொலைவழக்கு குறித்த அரிதான த்கவல்களை உள்ளடக்கிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம் சிறப்புக் கட்டுரை, அப்பாஸ் கியரோஸ்டமியுல்னான உரையாடல், ஹேராம்-தசாவதாரம்-உன்னைப் போலொருவன் - ப் விரிவான அலசல்கள், பொக்கிஷம்(தமிழ்), வீடு (கன்னடம்) மற்றும் பரிமாணங்களை மாற்றுதல் என்றசிறப்புக் கட்டுரை, அண்மையில் வெளியான குறும்படங்கள் குறித்த தகவல்கள்-விமர்சனங்கள், capitalism-a love story-மைக்கல்மூர் ஓர் பார்வை என்று பரவிக் கிடக்கின்றன பல சங்கதிகள். தனி மனி்தனால் சேகரிக்க முடியாத பல சேகரங்கள்!. தாராளமாகச் சந்தா செலுத்தலாம்!
"ஆணவப் படங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு வகைகள் குறித்த சொற்பொழிவுகள், சில குறும்படத் திரை காணல்கள் முதல் நாளில்!
நடிப்பது, பார்ப்பது, கவனிப்பது-பயிற்சிகள், children of heaven-ஈரானியத் திரைப்படம் பார்த்தல்- 2-ஆம் நாள்!
கதை,திரைக்கதை, எழுதும் முறை, எழுத்தைக் காட்சிப் படுத்துதல், கதைக்கான கருவைக் கொடுத்து திரைக்கதையாக்கச் செய்தல் உள்ளிட்டவை, 3-ஆம் நாள்!
புகப்படக் கலை வரலாறு, கேமரா-ஃப்லிம் வகைகள்,ஷாட் மற்றும் கோணங்கள், ஒளிப்பதிவு குற்த்த பயிற்சிகள், மற்றும் ரன் லோலாரன் ஜெர்மானியப் படத் தி்ரைப்படம் பார்த்தல்- திறனாய்வு, 4-ஆம் நாள்!
டிஜிட்டல் ஃப்லிம் மேக்கிங்க் வகுப்பு, பங்கேற்றோரே கேமரா இயக்கிடச் செய்தல்-என, 5-ஆம் நாள்!
வந்திருந்தோரைக் குழ்க்களாகப் பிரித்துப் படமேடுக்கச் செய்தல்; படத் தொகுப்புப் பயிற்சி என, 6-ஆம் நாள்!
குழ்வினரின் அனுபவப் பகிர்வுகள், பயிற்சியாளர்களே தயாரித்த குறும்படங்கள் திரையிடல், சிறந்தது தேர்ந்தெடுத்தல், சான்றிதழ்-மற்றும் குறுந்தகடு வழங்கல்-என 7-ஆம் நாள்!
தரமான உலகத் திரைப் படங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களைப் பார்த்திடும் வாய்ப்பு, திறமையும் புகழுமிக்க சாதனையாளர்களைக் கொண்ட விரிவுரைகள்-நேரடிப் பயிற்சிகள்- இவற்றையெல்லாம் பெற்றிடக் கல்லூரிக்குச் சென்றால் பல லட்சங்கள் செலவிட வேண்டியதிருக்கும். "
ஆகஸ்ட் 09-15- சிதம்பரம், கொத்தட்டையில் நிகழ்ந்த குறும்படப் பயிற்சிப் பட்ட்றையில் பங்கு பெற்ற இராயபுரம், பன்னீர் செல்வத்தின் அனுபவப் பகிர்வுகளே மேற்கண்டவை!
பகிர்வுக்கு நன்றி தலைவா!!
ReplyDelete