Sunday, December 13, 2009

சட்டம் ஓர் இருட்டறை ! அன்று சொன்னது அர்த்தம் உள்ளது? பூனைக்கு யார் மணி கட்டுவது?


ராகுல் காந்தி, மற்றும் சோனியா காந்தி குறித்து தகவல் பெறும் உரி்மைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களப் பல்வேறு தரப்பினர் கேட்டிருந்தனர்.

பாராளுமன்ற - சட்ட மன்ற உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து ஆகியோர் தனி நபர்கள், எனவே, த்கவல் பெறும் உரிமைச் சட்ட்த்தின் கீழ் அவர்கள் குறித்த விபரங்களைப் பெற முடியாது.

நாடாளுமன்றம். சட்டமன்றம் போன்றவற்றிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெற முடியும் என்று மத்திய தகவல் ஆணையத் தலைவர், ஹபிபுல்லா, தகவல் ஆணையர், ஷைலேஸ் காந்தி ஆகியோர் மேற்கண்டவாறு விளக்கம் தருகின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே வந்து விட்டபின் எப்படி தனி மனிதர்களாக அவர்களைக் கருத முடியும்?

அரசு அதிகாரிகளின் விளக்கத்தில் - செயலில்- நியாயம் சிறிதேனும் இல்லை.

தமிழக அரசு இணைய தளத்தில் தமிழக முதல்வரின் மனைவியின் பெயர் குறிப்பிடப் படவில்லை. married; children 6 ( male 4 and female 2) என்று மட்டுமெ குறிக்கப் பட்டுள்ளது. மனைவியின் பெயரும் வாரிசுகளின் பெயரும் குறிப்பிடப் படுவதுதானே சரி்யானதாக இருக்க முடியும்? இது எந்த ஊர் நியாயம்?

ஒரு அரசு ஊழியரோ/ அதிகாரியோ ஒரு மனைவி, ஆண் 2, பெண் 1 என்று எழ்தித் தந்தால் போதுமா? நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா?

சமூக நல ஆர்வலர்கள் முயற்சி எடுக்க வேண்டிய விஷயங்கள் இவை.

தகவல் உதவி: தினமணி 13,டிசம்பர்,2009

0 comments:

Post a Comment

Kindly post a comment.