ஆறாவது நிலம் என்றொரு தலைப்பு எனக்குக் கிடைத்தது . திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து! நீதிமன்றம் சென்று உறுதி மோழி எடுத்துவிட்டால் போதும் இதழை நடத்தி விடலாம். யோசித்தேன். முடிவெடுத்தேன், வேண்டாம் என்று!.
தமிழக அரசியல் என்ரொறு வாரமா/மாதம் இரு முறையா தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அதில் ஒரு பகுதி எல்லோரையும் கவரக் கூடியது. ஆணித் தரமாக எழுதப்படும் கருத்துகளுக்கு இதுவரை பதில் எதுவுமே வந்ததில்லை. ஒரே ஒருவரிடமிருந்து மட்டும் விளக்கக் கடிதம் வந்து பிரசுரமானதாக நினைவு!
அந்தப் பகுதியின்பெயர்: ஆறாவது விரல். - மனசாடசி;-
சொல்லிக் கொள்ளும் படி சொந்தம் எதுவும் இல்லாதவர். MLA விடுதியில் கேண்டீனில் வேலை பார்த்து வந்தார். எழும்பூரில் ஒரு பேப்பர் கடைக்காரரும் பழக்கம், அதன் உரிமையாளருக்குச் சிவகங்கை பிரமுகரின் ஆதரவு இருந்தது.
ஒரு கட்டத்தில் கேண்டீன் காரரைத் தி்வால் செய்துவிட்டு, புறநகர்ப் பகுதியில் ஒரு மிலிடரி ஹொட்டல் நடத்தினார். அதில், இரண்டு பேர் பார்ட்னர். ஒரு கட்டத்தில் பார்ட்னர் இருவருக்கும் சாத்தினார் பட்டை நாமம் . அடுத்து 750 ரூபாய் சீட்டு. அனைவருக்கு மொட்டை.
சிவகங்கைக்காரரிடம் டீ கொடுக்கும் பணி! தேசீயக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணப்பாளர் ப்ட்டம் கிடைத்தது. ஜாதிக்காரர் என்ற அடி்ப்படையில் 150 ரூபாய்க்கு வீடு ஒன்றும் பிடித்து விட்டார். கூட்டணி இல்லாமல் களம் இறங்கியது. அடித்தது அதிர்ஷ்டம். சென்னையில் பாரம்பர்யமிக்க தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப் போனார். ஓல்டு லேம்ப்ரட்டர் ஸ்கூட்டர் ஒன்றை வங்கிக் கொ ண்டார்.
மூன்று முறையும் தேர்தலில் சீட்டினை வாங்க முடிந்தது. அந்தப் பிரமுகரின் ஆசி்யுடன் திராவிடக் கட்சியில் இணைந்தார். சீட்டும் வாங்கி செல்வாக்கோடு இருக்கின்றார்.
காலி இடத்தில் குடிசை போடுதல், கட்டப் பஞ்சாயத்து , உரிமையாளர் தத்தியாக இருந்தால் போலிப்பத்திரச் சிக்கலில் மாட்டி வ்டுவார். பணம் கொட்டியது. கூட்டுறவுச் சங்க உயர் பதவியும் கிடைத்தது, ஆட்சி மாறியது. வழக்குகள் பல பதிவாயின. வீடு காலி செய்ய துப்பாக்கி காட்டி மிரட்டியது, வருமான வரித் துறை அதிகாரியின் கன்னத்தில் அடித்த வழக்கு, டக்டர் தம்பதியை மிரட்டி நிலத்தைப் பறித்த வழக்கு என்று நீண்டு கொண்டே போனது.
மதுரை காந்தி ம்யூசியத்திற்குப் போய் புத்தகம் படிக்கச் சொன்னது, நீதிமன்றம். திராவிடக் கட்சிக்குத் தாவினார், கட்சியில் ஜாதி ரீதியாக ஷாக் பிரமுகரிடம் அடக்கலமானார். இம்முறை மக்கள் நலப் பணிக்கு கிடைத்த இடம் ஆசியாவிலே மிகப் பெரிய இடம்.
150 கோடியில் வழ்க்கையைத் துவக்கியவருக்கு 150 கோடிக்கு மேல் சொத்து. மேலும் சொந்த பந்தமில்லாதவருக்கு சொந்தங்கள் வேணுமல்லவா? பழைய வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்தவரின் மனவியையும் குழந்தையோடு அழைத்து வந்து விட்டார். அப்பாவிக் கணவர் பெரு்ந்தன்மையோடு மௌனிக்கின்றார்.
வாழ்க ஜனநாயகம்? வளர்க தமிழர் பண்பாடு. எங்கே போகின்றோம்?
source: தமிழக அரசியல், 56/212 கிரிகுஜா என்கிளேவ்,. சாஸ்திரி நகர், முதல் அவென்யூ, அடையார், 600 020.
Sunday, December 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.