எட்டு வீட்டில் பிள்ளைமார்+ பத்மநாப ஸ்வாமி கோவில்+ மார்த்தாண்டவர்மா
http://keralawindow.net/imp_e.htm
"ஆற்றங்கரையின் மரமும், அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்" என்பது இளமையில் படித்த 4-வரிப் பாடலின் முதலிரண்டு வரிகள். அந்தப் பாடலின் அடுத்த இரண்டு வரிகள் உழவுத் தொழிலின் சிறப்பினை வலியுறுத்தும்.
எட்டு வீட்டில் பிள்ளைமார் கேரளத்தில் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்றும் இருந்தது. திருவனந்தபுரம் பத்மநாத சுவாமிகள் திருக்கோவில் நிர்வாகம் கூட அவர்கள் கையில்தான் இருந்தது.
எட்டு வீட்டில் பிள்ளைமார் அவர்களது வீட்டின் பெயரால் அழைக்கப் பட மாட்டார்கள். வசிக்கும் இருப்பிடத்தைக் கொண்டே அறியப் பட்டார்கள்.
வெங்கனூர் பிள்ளை, பளிச்சல் பிள்ளை, கழகூட்டாத்தூ பிள்ளை, ரமனமாதாதில் பிள்ளை, மார்த்தாண்டமாதாதில் பிள்ளை,செம்பழந்தி பிள்ளை, குளத்தூர் பிள்ளை, குடமான் பிள்ளை என்றவாறாக எட்டு வீட்டில் பிள்ளைமார் என்ற பெயரினைப் பெற்றார்கள்.
வே நாடு அவர்கள் சட்டமும் நீதியும் செலுத்துமிடமாயிற்று. ஆறு நாட்டவர் அல்லது தரக் கூட்டம்ஸ் என்று அழைக்கப் பட்டனர். நாட்டுக் கூட்டம் அல்லது ஜனநாயகத்தைப் பேணியவர்கள்,
1729-ல் மார்த்தாண்ட வர்மா அரசுப் பொறுப்பிற்கு வந்தார். எட்டு வீட்டில் பிள்ளைமார் மக்கள் தலைவர்களானார்கள். அரசரும் அவர்களைச் சார்ந்தே இயங்கினார். ஆனால், ஆங்கிலேயர் வருகைக்குபின் நிலைமை மாறியது. நாட்டின் செல்வம் சுரண்டப் படுவதையும், சுதந்திரம் பறிக்கப் படுவதையும் எட்டு வீட்டில் பிள்ளைமார் எதித்தனர். மன்னர் மார்த்தாண்டருக்கும் பிள்ளைமார்களுக்கும் பகைமை உண்டாயிற்று.
எட்டு வீட்டில் பிள்ளைமார் சொத்தை அரசர் பறித்துக் கொண்டார். அவர்களின் பெண்டு பிள்ளைகளையும் மீனவர்களுக்கு விற்றுவிட்டார்.
ஆனால், எட்டு வீட்டில் பிள்ளைமார் இறுதிவரை மக்கட் தொண்டர்களாகவும், தேச பக்தர்களாகவுமே திகழ்ந்தார்கள்!
http://keralawindow.net/imp_e.htm
0 comments:
Post a Comment
Kindly post a comment.