ஆசை யாரை விட்டது என்பார்கள்? ஆம் ! ஆசையினை விட்டுவிடச் சொன்னவர் புத்தர். ஆனால் அவரது கடைசி ஆசை என்ன தெரியுமா?அவரது அஸ்தி மீது "ஸ்தூபம்" என்னும் புத்தக் கோவில்கள் கட்டப்படவேண்டும் என்பதேயாகும்.
அதன்படி, அவர்இறந்த பிறகு அவரது அஸ்தி,பற்கள், எலும்புகள் இவற்றைப் புதைத்து அதன்மீது "ஸ்தூபங்கள்" கட்டினர்.
கி.பி. 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்தூபத்திலிருந்து, செப்புப் பாத்திரத்தில் வைக்கப் பட்டிருந்த புத்தரின் அஸ்தி, சமலாஜி என்ற பகுதியில் உள்ள தவனி மோரி என்ற இடத்திலிருந்து கண்டு பிடிக்கப் பட்டது. "தாச பால சரீர நிலைய" என்று அந்த செப்புப் பாத்திரத்தின் வெளிப் ப்றத்தில் எழுதப் பட்டிருக்கின்றது. அதற்குப் புத்தரின் அஸ்தி என்பது பொருள்.
அந்த செம்புப் பாத்திரம் குஜராத்தில் உள்ள M.S. பல்கலைக் கழத்தி்ன் தொல்பொருள் துறையில் வைக்கப் பட்டுள்ளது. அவ்வப் பொழு்து ஆங்குவரும் பிரபலங்களுக்குக் காட்டுவது வழக்கம். ஜனவரி 15-ல் நிகழப் போகும் "உலக புத்த நெறி மாநாட்டில்" முதல் இரண்டு நாட்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
46-ஆண்டுகளாக இது பொது மக்கள் பார்வைக்கு வைக்கப் படவில்லை என்று பேராசிரியர் சோனாவானே கூறு்கின்றார்.
நன்றி: தின மலர் 13-12-2009
0 comments:
Post a Comment
Kindly post a comment.