வாழையடி வாழை-கவி்ஞர் வைகறைச் செல்வன்
காட்டுக் கதலி கருங்க்கொட்டை
காட்சி கினிய விசிறியும் ஈ
ரோட்டு மொந்தன் பூ மஞ்சள்
ருசிக்கு மிகுந்த வெண்கதலி
நாட்டோர் விரும்பும் பச்சையோடு
நமரன் சாம்பல் செம்பட்டு
சூட்டைத் தணிக்கும் மலைப்பேயன்
தொங்கும் கூலி சந்தனமே
கேட்பீர் மேலும் தேங்கதலி
கேள்விப்படாத குலைப்படத்தி
ஊட்ட மிக்க நேந்திரனும்
உத்தி ரன்கல் சிறுமலையும்
வாட்டும் பசிக்கு பெரு ஆணை
மகர வாழை நாடனென
பாட்டில் வாழை வகையறுத்தேன்
பாவா ணன்யான் வைகறையே.
காட்டு வாழை , கதலிவாழை, கருவாழை, கொட்டைவாழை, விசிறிவாழை,
ஈரோட்டு மொந்த்ன்வாழை, பூவாழை, வெண்கதலி(ரஸ்தாலி வாழை) ,பச்சை வாழை, நமரன் வாழை, சாம்பல் வாழை, செவ்வாழை, பட்டு வாழை, மலை வழை, பெயன் வாழை, கூளி வாழை, சந்தன வாழை, தேங்கதலி வாழை, குலை வாழை,படத்தி வாழை, சிறுமலை வாழை,உத்திரன் வாழை,கல் வாழை, சிறுமலை வாழை, பெரு வாழை, ஆனைவாழை, நகர வாழை, நாடன் வாழைஆக,28 வகை.
விகடகவி மாத இதழ். e-mail: vikatakavi_chennai@yahoo.com
]
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.