Thursday, December 3, 2009

ரஜினிக்கு இல்லாத துணி்ச்சல், ரஜினி ரசிகர்களுக்கு!புத்தியோடு பிழைத்துக் கொள்வார்களா?



பாக்கியராஜ்-ராஜேந்த்தருக்கு இருந்த துணிச்சல் கூட ரஜினிக்கு இல்லையே என, கொதித்து எழுந்து உள்ளனர், சூப்பர் ஸ்டாரின், திருச்சி ரசிகர்கள்!

இன்னும் புத்திசாலித்தனமாக ஒரு உண்மையைக் கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர். "தன்னுடைய ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகப்போகும் சமயத்தில்,அரசியலுக்கு வரப்போவது போன்ற ஓர் தோற்றத்தை/மாயையை ஏற்படுத்துவார்.படம் ரிலீசாகி ஓடிய பிறகு, அவரைப் பார்க்க முடியாது.திரும்பவும் அடுத்த பட ரிலீசின் போதுதான் "பஞ்ச் டயலாக்" பேசுவார். ஆக அவர் படங்கள் ஓட எங்களை அவர் பயன்படுத்திக் கொண்டார். இனியும் அது நடக்காது."

"அரசியலுக்குக் கண்டிப்பாக வருவேன்/வரமாட்டேன் தெளிவாகச் சொல்ல வேண்டும்.இதுவே,தங்கள் இளமையையும்,உழைப்பையும், வாழ்க்கையையும் தொலைத்த தமிழ் ரசிகர்களுக்கு அவர் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்".-என்று சரியான திசை வழியில் சிந்திக்கத் துவங்கியுள்ளனர்.

ஆனால். ஜ்னநாயகக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து், கட்சிக்கொடியையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். இவர்கள் செயலை மற்ற ரஜனி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கின்றர்களோ தெரியவில்லை. ஆனான்ப் பட்ட அம்மியே காற்றில் பறக்கும் போது உங்களுக்கு ஏன் இந்தவெட்டி வேலை? கோ்டானு கோடி பணம் வைத்திருக்க்கும் ரஜனி போன்றவர்களே பாம்புக்குத் தலை, மீனுக்கு வால் என்ற ரீதியில் நடந்துகோண்டு,சொத்தைக் காப்பாற்றிக் கொண்டும்/பெரு்க்கிக் கொண்டும் போவதைப் பார்த்தும் புத்தி வரவில்லையா?
இல்லை; அப்பன்-ஆயி சேர்த்துவைத்த சொத்து குவிந்து கிடக்கின்றதா வீட்டில்?

20-23 வயதுக்குள் நல்ல படிப்பு வந்தால்/வசதி இருந்தால் தொடர்ந்து படியுங்கள்; இல்லையென்றால் ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்று, வாழ்க்கையில் செட்டிலாகப் பாருங்கள்; அரசியல்தான் உண்மையான நோக்கம் என்றால் உங்கள் காலில் சுயமாக நிற்க முயற்சி செய்யுங்கள்.

கால்ம் கடந்தபின்,ஞானோதயம் வந்து புண்ணியமில்லை, தம்பிகளா?
source:குமுதம் ரிப்போர்ட்டர் 03-12-2009

1 comments:

  1. \\பாக்கியராஜ்-ராஜேந்த்தருக்கு இருந்த துணிச்சல் கூட ரஜினிக்கு இல்லையே என, கொதித்து எழுந்து உள்ளனர், சூப்பர் ஸ்டாரின், திருச்சி ரசிகர்கள்!\\

    ):

    ReplyDelete

Kindly post a comment.