மாரி என்பவரின் மனைவி செல்வி, தனக்கு, 5-வதாகப் பிறந்தஆண் குழந்தையை விற்க முயன்றபோது கைதானார். மும்பையைச் சேர்ந்த கண்ணன் என்பரிடம் 70,000-ம் ரூபாய்க்கு் விலை பேசி முடிக்கப் பட்ட சூழல்; 15000/=ம் , சுப்பிரமணியன் (50) அரசு மருத்துவமனைப் பணியாளர் (PARAMEDIC IN THE GOVT. HOSPITAL) , குழந்தைகள் விற்பதையே தரகுத் தொழிலாகக் கொண்ட கோட்டைத்தாய் (65), மயிலு, ஆகிய பெண்களுக்கு 15000/=ம், மீதி 40,000/-ம் தாய், செல்விக்கு. (25). 3-வது பரிமாற்றதின் போது மாட்டிக் கொண்டனர் எல்லோரும்!. காவல் துறைக்குப் புகார் அளித்தவர் சரஸ்வதி சுரேஷ்!
கைதான மும்பை கண்ணன், சட்டத்திற்குப் புறம்பாகக் குழந்தை விலைக்கு வாங்கப்படுவது எனக்குத் தெரியாது; தத்து எடு்த்துக் கொடுக்கும் நிறுவனத்தின் மூலம்தான் வாங்கப்படுகிறது என்று எண்ணிக் கொண்டதாகக் காவலரிடம் கதைத்துள்ளார்.
2006-லிருந்து இன்றளவும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஓர் குழந்தைகள் காப்பகத்திலிருந்து குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்குக் கைமாறியுள்ளன என்பதுதான் அதிர்ச்சிதரும் தகவல். இதற்கென்றே ஓர் திருட்டுக் கும்பல் செயல்படுவதாகத் தகவலைத் தருவதும் காவல்துறைதான். கடத்தப்பட்ட பெரும்பான்மைக் குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் த்கவலைத் தருகின்றனர்.
பெரும்பான்மைக்கான விளக்கத்தைக் காவல்துறையி்டம்தான் கேட்க வேண்டும். அந்தக் குழந்தைகள் காப்பகத்தின் பெயரை காவலர் வெளியிடாததன் காரணமும் ???.
நிகழ்ந்த இடம், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ் நாடு. தென் பொதி்கைத் தென்றல் வீசும் குற்றாலம் தென்காசியிலிருந்து 5 மைல் தொலைவுதான். ஆனால், தென்காசி வழியாக வரும் காற்று தென்றல் அல்ல.
உயிரே உன் விலை இதுதான? துணை போகும் பெண்கள் மனசும் கல்தானா? வறுமை கொடுமை தான்! ஆனால், இந்த அளவிற்கா?
source: TOI 05-12-2009. saturday.
Saturday, December 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.