ஆப்பிளை மிஞ்சிடும் பட்டிக்காட்டுப் பழங்கள்:--
எல்லாம் நன்மைக்கே என்பது இயற்கை நியதி. உணவே மருந்து.
அண்மையில் எனது நண்பர் விகடகவி, தமிழ் மாத இதழ், ஆசிரியர் S.J.பால், ஒரு பெரியவரை அறிமுகப் படுத்தி வைத்தார். அவர் ஒரு ஆளைப் பார்த்தவுடன் அந்த ஆளின் குண் நலன்களையும், உடம்பில் உள்ள கோளாறுகளையும் கூறிவிடுகிறார். உணவே மருந்தென்று அறிவுறுத்துகின்றார். சித்த மருந்துகளைத் தயாரித்து்ம் தருகின்றார்.விளம்பரப் பலகை எதுவும் வைத்துக் கொள்வதில்லை.கூறுவன "ந்ச்" சென்று இருக்கின்றன.
உதாரணத்திற்கு :
"உலகத்தில் மண்மீது விளயும் பொருட்கள் எல்லாவற்றி்ற்கும் மனிதன்தான் (வயிறு) சுடுகாடு. ஆனால், மனிதனுக்கு மண் சுடுகாடு."
சைவம்; அசைவத்திற்கு அவர் கொடுக்கும் விளக்கம் வித்தியாசமானது. மனித உடல்/வயிறு ஏற்றுக் கொள்வதெல்லாம் சைவம். மற்றவை அசைவம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரிசியைக் கு்றைத்த்திட/நீக்கிட அறிவுரை சொல்கின்றார். அப்பொழுது அரிசி அவருக்கு அசைவமாகின்றது. என்பது அவர் தரும் விளக்கம்.
ஆலம் பழம், அரசம் பழம், இச்சலம் பழம், அத்திப் பழம்,. கிளாப் பழம், பூலாப் பழம், ஆனாப் பழம், ஈச்சம் பழம் (பேரீட்சை அல்ல) , சப்பாத்திக் கள்ளிப் பழம் முதலியன. இவற்றுள் சில, ஊருக்கு வெளிப்புறங்களில் வானம் பார்த்த பூமியில், காடு, கரைகளில்.வயல் வெளிகளில், ஏரி், குளக் கரைகளில் கிடைக்கும். சாதரண இலந்தைப் பழத்தைவிட, சற்றுப் பெரியதாகவோ/சிறியதாகவோ இருக்கும். பல்வேறு சுவைகளில் கிடைக்கும். ஒதுக்கிவிடாமல் உள்ளூர்ப் பெரியவர்களின் உதவியுடன் தெரிந்துகொண்டு சாப்பிடலாம். ஏனெனில் சில சாப்பிடக் கூடாத வேறு பழங்களாகவும் இரு்க்கலாம்...
இலவசமாக/ குறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கக் கூடிய இந்த வகைப் பழங்களையும் தேடிக்கண்டுபிடித்துப் பயன்படுத்தலாம். இவை ஆப்பிள், திராட்சை, வாழைப் பழங்களைப் போன்றோ/அதைவிட அதிகமாகவோ ஊட்டச் சத்துக்கள் (வைட்டமின்) உள்ளவை.
இவற்றைச் சொன்ன பெரியவர்:
மாஸ்டர்.கே. மணி அய்யா, 4, முதல் தெரு,செம்மண் பேட்டை,கெல்லீ்ஸ கார்னர், சென்னை-6000 010. ஹோட்டல் சன்மான் பின்புறம். 26425955
போவதற்கு முன் தொடர்பு கொள்வது ஏமாற்றத்தைத் தவிர்க்கும்.
vikadakavi_chennai@yahoo.com
0 comments:
Post a Comment
Kindly post a comment.