
இந்த அமைச்சரின் படத்தைத் தேடப்போய்க் கிடைத்த விஷயங்களைத் தனித்தலைப்பில் கொடுத்துள்ளேன்.அதற்காக இவருக்கு நான் நன்றி சொல்லவேண்டும்,முதலில்!
இவர்,திரிணாமுல்காங்கி்ரஸ் தலைவர்களில் ஒருவர்; மத்தியசுற்றுலாத்துணைஇணை அமைச்சர்;
இவருக்கு டெல்லியில் தங்கிடப் பங்களாவினை அரசு ஒதுக்கவில்லை. எனவே, ஹோட்டலில் தங்கினார். ஆன செலவு 36/37 லட்சம். அசோகா ஹோட்டலுக்கு அமச்சர் பாக்கி வைதுள்ளார்.இவை 6 மாதங்களுக்கான தொகை.அதற்கு முன்,சுற்றுலா வளர்ச்சிக் கார்ப்பரேஷன் நடத்தும் சாம்ராட் ஹோட்டலில் தங்கிருந்தார்.இவர் அந்த இடத்தில் தங்கியிருக்காவிட்டால் அந்த இடம் வாடகைக்கு விடப்பட்டிருக்கும். சுற்றுலாத்துறைக்கு வருவாயும் வந்திருக்கும். அது வேறு விஷயம்.
உடனே ஹோட்டலைக் காலிசெய்யவேண்டுமென்று கட்சித்தலைவி கட்டளையிட்டார். அமைச்சர் ஹோட்டலைக் காலி செய்தார். பத்திரிக்கைகளுக்குச் செய்தியானது,விவகாரம்.
நிருபர்கள் விளக்கம் கேட்டபோது, ஹோட்டல் பில் தரப்படாததால் எவ்வளவு கட்ட வேண்டும் என்று ஹோட்டல் பில் தராதால் கட்டவில்லை என்று பதில் சொல்லியுள்ளார். என, தினமணி் 2/12/2009-ல், செய்தியாக வெளியிட்டிருக்கின்றது. இன்னொரு ஆங்கில நளிதழில் "பில் கட்டுவதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றேன்" என்று சொல்லியுள்ளதாக வெளியிட்டுள்ளது. இரண்டில் எதுவாக இருப்பினும் சிரிப்புக்குரியதுதானே, வலைப்பூ நண்பர்களே!
நம் போன்ற சாமான்யர்கள் இந்த ஹோட்டல்களை நினைத்த்க்கூடப் பார்க்க முடியாது. உள்ளே போய்ப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். வாழ்க்கையில் இப்படியெல்லாம் கூட அனுபவிக்க வாய்ப்புக்கள் உள்ளனவா என்றே எண்ணத் தோன்றும்.இந்திரலோகம்/சந்திரலோகம்/அந்தக்கால அரண்மனைகள் இப்படித்தான் இருக்கக்கூடும்/இருந்திருக்கக்கூடும் என்றும் நினைத்துக் கொள்ளலாம்.
பாவம்! சுல்தான் அஹம்மது,MP, முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றார்.இணை அமைச்சரானது் அவருக்குக் கிடைத்திட்ட இன்னொரு வாய்ப்பு. அவருக்கு மத்திய பொதுப்பணித்துறையால் வீடு ஒதுக்க முடியவில்லை.இவருக்கும் இந்தச் செய்தி பத்திரிக்கையில் வெளிவராமலிருக்கச் செய்யவும் தெரியவில்லை. ஆனாப்பட்ட பத்திரிக்கைகளே போட்டி போட்டுக்கொண்டு இதனை முக்கியச் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன.
அமைச்சரின் "வெள்ளந்தித்"தனத்திற்கு-வெள்ளை உள்ளத்திற்காக அனுதாபப் படுவதா அல்லது சிரிப்பதா என்று தீர்மானி்த்துக் கொள்வது அவரவர் பொறுப்பு.நான் நிருபராக இருந்தால் இடை ஒரு செய்தியாக நான் பணியாறும் பத்திரிக்கைக்கு அனுப்பியிருக்கமாட்டேன்.எனெனில், மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டிய செய்திகள்/தகவல்கள் ஏராளம் உள்ளன.
ஒவ்வொரு பா.உ.-க்கும் ஆண்டொன்றிற்கு ஒதுக்கப்படும் 2 கோடி எப்படிச் செலவு செயயப் படுகிறதென்பதப் பின்பற்றினாலே போதுமானது. எல்லா தினசரிகளும் "இன்றைய நிகழ்ச்சி"-களுக்கு்த் தனிப்பகுதி ஒதுக்குவது போன்று MLA/MP தொகுதிப் பங்கீட்டு நிதி விவகாரங்களுக்ககாகத் தனிப்பக்கத்தையே/தனிநாளையே ஒதுக்கலாம்.
எனக்கு வாய்ப்பிருந்தால் இந்தப் பணத்தினை "கஃகூஸ்" இல்லாமல் கஷ்டப்படும் மகளிர் பள்ளிக்கூடங்களுக்காகச் செலவிடுவேன். ஏதாவதொரு் சுகாதாரத் தேவைகளுக்கு மட்டுமே இந்த நிதியைப் பயன்படுத்திட வேண்டுமென்று சட்டங்க்கூடக் கொண்டுவரலாம். இதனைப் ப்டிக்கும் வலைப்பூ அன்பர்கள் இதனை நகலெடுத்து உங்கள் ஊர் MLA/MP-kkaLukk அனுப்பிவிட்டு அத்தாட்சியுடன் தகவல் தந்தால், நல்லதொரு புத்தகத்தினை என் செலவில் வாங்கி அனுப்பி வைக்கின்றேன், அத்தனை பேருக்கும்!
புத்தகம்: சொல்லத் துடிக்குது மனசு, விலை,ருபாய் 100/-
ஆசிரியர்: கலைமாம்னி VKT பாலன் (மதுரா ட்ராவல்ஸ் அதிபர்)
வெளியீடு: மத்ரா வெளியீடு, காந்தி இர்வின் ரோடு, எழும்பூர்,சென்னை-600008.

புத்தகத் தேர்விற்கான காரணம்:
"புத்தகம் ஊனத்தைக் காரணங்காட்டிப் பிச்சை எடுக்காத பொற்கரங்களுக்கு்க் காணிக்கை"ஆக்கப் பட்டிருக்கின்றது.
இந்நூல் உங்களுக்கோ்,சமூகத்துக்கோ பயன் தராது எனக் கருதினால் கொடுத்த காசைத்திருப்பிப் பெற்றுக் கொண்டு,இந்நூலைக் கிழித்து எறியுங்கள்..
அச்சடிக்கப்பட்ட குப்பைக் காகிதங்களை அடுக்கி வைக்கும் இடமாக உங்கள் அலமாரியைமாற்றி விடாதீர்கள்.-VKT BALAN
கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை அவர்களது பாடலின் சில
வரிகளை மாற்றிக்கொடுத்து்ள்ளேன்,கீழே!
சொல்லுவது எல்லோர்க்கும் சுலபமாகும்;
சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்;
எல்லையில்லா நீதிதன்னை எழுதுபவர்கள்
எழுதியவை எவையுமே தமக்கென் றெண்ணார்
என்வாழ்வில் நான் அறிந்த மனிதர்தம்முள்
இல்லையெனும் வி.கே.டி.பாலன் அவர்கள்
செந்தமிழ்த்தாய் உலகி்னுக்கே ஈந்த செல்வம்.
இதன் நகலை உங்கள் தொகுதி MLA/MP-kkaLukku அனுப்புவிக்கும் ஒவ்வொரு அன்புநெஞ்சமும் தங்கள் படத்தை எனக்கு அனுப்புவித்தால் நான் சாகும்வரை அவற்றை எனது சொத்தாகக் கருதுவேன். எனது், e-mail முகவரி முகப்பில் உள்ளது
oru thagaval
தமிழகத்தில் உள்ள வலைப்பூ அன்பர்கள் மட்டுமே பயன்பெறும்வகையில்தான் விருப்பத்தைவெளியிட்டுள்ளேன்.
தொடர்பு கொள்ள விரு்ப்பம் உள்ள அனைவரும் நிழற்படம் அனுப்பினால்,
சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி (மழை) பொழிந்ததற்கொப்பாகக் கருதி மகிழ்வேன்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.