புனே-நாக்பூர்-நாசிக்-மும்பை- 13000 பெற்றோர்கள் கையெழுத்து வேட்டை! நியாயமான கட்டணத்தில் கல்விக்காக !
தமிழகத்தில் அல்ல! மஹாராஷ்ட்ரத்தில்! பள்ளிக் கல்விக் கட்டண உயர்வு!
அண்மையில் மஹாரஷ்ட்ர அரசு அமைத்த குழுவின் அறிக்கை பள்ளி நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருந்ததால் பெற்றோர்கள் கொதித்தெழுந்தனர்!
பள்ளிக் கல்விக் கட்டணத்தைக் குறைத்திட வேண்டி,சென்ற சனிக்கிழமை கையெழுத்து வேட்டையில் இறங்கினர். மாலை ஆறு மணிக்கு மும்பை CST-யில் 5000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்து வேட்டை ஆடினர். அதே சமயத்தில் 30-க்கும் மேலானோர் ஊர்வலமாகச் சென்றனர், நியாயமான கட்டணத்தில், பள்ளிகளில் கல்வி தரக் கோரி!
இதே நிலைமை, புனே, நாக்பூர், நாசிக் போன்ற இடங்களிலும் தொடர்ந்தது.
மொத்தம் 13000-க்கும் மேற்பட்டோர் கல்விக் கட்டண உயர்வைக் குறைத்திடக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
23-12-2009-அன்று மஹாராஷ்ட்ரா அரசின் கல்வி இயக்குனரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவைச் சமர்ப்பிக்கப் போகின்றனர்.
இதற்கான முயற்சிகளை, FFA- FORUM FOR FAIRNESS EDUCATION என்ற மக்கள் விழிப்புணர்வு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
நன்றி: TOI mumbai
0 comments:
Post a Comment
Kindly post a comment.