Tuesday, December 8, 2009

13-12-2009- அன்று சென்ட்ரலில் வெளியூர் ரெயில்கள் இயங்காது!



புறநகர் மின் ரயில்கள் மட்டும் வழக்கம் போல் சென்னை சென்ட்ரலில் இருந்தே இயங்கும்.

பிளாட்பாரங்கள் விரிவாக்கம் செய்யும் 2-ஆம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 13-12-2009 ஞாயிறுக் கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சென்ட்ரலில் இருந்தும், மறு மார்க்கத்திலும் எந்த ரயில் சேவையும் இயக்கப் பட மாட்டாது.

14 ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. டிசம்பர் 13 தேதி ரயில் பயணம் செய்ய முன் பதிவு செய்திருப்பவர்கள், பெரம்பூர்/எழும்பூர் சென்று ரயில் ஏற வேண்டியிருக்கும். ரயில் நேரங்களிலும் சில மாற்றங்கள் உண்டு.
விசாரி்த்துப் பதற்றமெதுவும் இல்லாமல் மகிழ்ச்சியோடு தி்ட்டமிட்டபடியே பயணிக்கவே இந்தப் பதிவு.

திருவள்ளூர்-மற்றும் பெரம்பூருக்கு ,

சென்னை பிராட்வே, எழும்பூர், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து 200 சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செயப்பட்டுள்ளன.

கும்மிடிப் பூண்டி, பொன்னேரி பகுதிகளில் இருந்து சென்னைக்கு 13,டிசம்பரில் பஸ் வசதிகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

தேவைப் படுவோருக்குத் தகவல்களைப் பரப்புவது வலைப்பூ நண்பர்கள் கடமை.
நன்றியுடன், பதிவாளர்.

source: தினமணி 08-12-2009 செவ்வாய்க் கிழமை.

0 comments:

Post a Comment

Kindly post a comment.