Monday, December 7, 2009

கமல் போட்டது 10 வேடங்கள்/ ரமணி போட்டது 60 வேடங்கள்











லட்சுமி, சரஸ்வதி பார்வதி எங்கே போனார்கள்?

மூன்று தேவியரும், மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்றுள்ளதாகத் தகவல் கிடைத்தது. ஏன்? ஒரு நாட்டிய நிகழ்ச்சியைக் காண!

தசாவதாரத்தில் கமல் போட்டது 10 வேடம். கோலாலம்பூரில் அம்பத்தூர் "ஆடற்கலை ராணி" ரமணி போட்டது 60 வேடங்கள்.

2 ஒப்பனைக் கலைஞர்கள். ஒரு வேடத்திற்கு எடுத்துக் கொண்ட நேரம் 4 நிமிடங்கள். இஃதொரு சாதனை நாட்டிய உலகில்! மலேசிய உள்துறை அமைச்சர் ஒய்.பி.டத்தோ ஸ்ரீ ஹிசாமுதின் தலமை! பிரமித்துப் போனது மலேசியா. "திருமுறை நாட்டியத் தென்றல்" பட்டத்தைச் சூட்டோடு சூடாக வழங்கியது, " மலேசிய இந்து சேவை சங்கம்."ஆஸ்ட்ரோ டி.வி. மலேசியாவில் இதனை ஒளி பரப்பியது.

3 நாயன்மார்கள் ஏன் விடுபட்டுப் போனார்கள் என்று "பால ரத்னா", "திருமுறை நாட்டியத் தென்றல்" ரமணியிடம்தான் கேட்க வேண்டும். அம்பத்தூர் சௌத் இந்தியன் போஸ்ட் உரிமையாளர் டி.அசோகன் தனது இலவச வார இதழில் இச்செய்தியை அரைப்பக்க விளம்பரமாகவெளியிட்டுள்ளார். அதனால்தான், இந்த சிந்தனை! வலைப் பதிவு.

இந்நிகழ்ச்சியைக் கண்டு மகிழததான் மூன்று தேவியரும் மலேசியா சென்றுள்ளனர். அவர்களுக்கு ஆங்கே நிலவும் சுத்தமான சூழ்நிலை பிடித்துப் விட்டதால் அங்கேயே தங்கி விடு்வதென்று தீர்மானித்து விட்டார்களாம்.

அவர்களை அழைத்துவரும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பதென்பது் சர்ச்சைக்குள்ளானது;

வடமொழிப் புரோகிதர்களா/ பன்னிரு திருமுறை ஓதுவார்களா ? என்று தமிழகக் கோவில் உழவாரப் பணிக்கூட்டத்தார்க்கும், கோவில் அர்ச்சகர்களுக்கும் விவாதப்போர் நடந்ததாம்.!

இறுதியில், பன்னிரு திருமுறைகளில் செய்விக்கப்படும் திருக்கோவில் குட முழுக்கு நிகழ்வுகள் செல்லுமா? செல்லாதா என்ற வழக்கிற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தபின் பார்த்துக் கொள்ளலாம். என்று முடிவெடுக்கப் பட்டு்விட்டதாம்.

இன்னுமொரு கொசுறுத் தகவல். கல்வியா? செல்வமா? வீரமா? -சரஸ்வதி சபதம் திரைப்ப்படத்திற்குப் பின்னரே மூன்று தேவியரயும் சேர்த்துப் பார்க்க ஆரம்பித்தன, ஊடகங்கள்! அந்தப் படம் ஏ.பி.என். நாகராஜன் கைவண்ணம். ஆனால் அதன் மூலமோ புதுமைப் பித்தனின் கற்பனை! தகராறின் முடிவு நி்னைவில் இல்லை.

செல்லவேண்டிய பாதையைத் தீர்மானமாகத் தீர்மானித்து விட்டவர்கள் திசைவழிப் பயணத்தை நம்பிக்கையோடு் தொடர்ந்திட்டால், வெற்றி நிச்சயம்!
அது கமலஹாசனாக இருந்தாலும் சரி! அம்பத்தூர் ரமணியாக இருந்தாலும் சரி! திண்டுக்கல் கௌதமாக இருந்தாலும் சரி!

காலம் எல்லோருக்கும் 24 மணிநேரம்தான். காலத்தே பயிர் செய்வதைப் பொறுத்து அறுவடை நிச்சயம்!

நாம் எதை அறுவடை செய்து கோண்டிருக்கிறோம் வலைப் பூ நண்பர்களே?
SENIOR-கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

என்னைத் தொடர்பு கொள்ளும் முதல் 7 பேருக்கு அந்தப் புத்தகம் இலவசம்.
எந்தப் புத்தகம் என்பது் எனது பதிவுகளைத் தொடர்ந்து படிப்போர்க்குத் தெரி்யும்!

மூன்று தேவியர் பீடங்கள்- ஜி. போஸ்ட் கௌதம் வலைப் பூவிலிருந்து. என்னை ஊக்குவிக்கும் அவருக்கு அன்பார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!

1 comments:

  1. Hari om,
    I just came through your blog and i have an answer to your question regarding the 3 missing nayanmars. both kazharsingar nayanar and serundhunai nayanar come in the same scene simultaneously. Similarly sadai-ya nayanar and issai nayanar are husband and wife. Nedumaran and mangayarkarasi are also couples. Hence Ms.Ramani could not do all the 3 characters who had to be present on the stage simultaneously. So her students did those roles. Your blog shows your vivid power of imagination. A good post.

    R.Sunderrajan
    Kanchi kamakoti natyalaya

    ReplyDelete

Kindly post a comment.