1. மரணத்தின் பரிசும் மண்ணறையின் பயங்கரமும்:-
"மண்ணறையில் வாழும் மரணித்தவர்களின் வாழ்க்கை எத்தகையது?" என்று நல் அடியார்கள் இறைவனிடம் வேண்டுகின்றனர். கேட்ட நல்ல அடியார்களை இறைவன் சில மண்ணறைகளின் பக்கம் அழைத்துச் செல்கின்றான். இறைவனின் பேராற்றலால் சில மண்ணறைகள் பிளக்கப் படுகின்றன.
உலகில் நன்னடத்தையோடு வாழ்ந்தவர்கள் "கந்துஸ்" என்னும் பட்டுத் துணியின் மீது மகிழ்வுடன் கிடக்கின்றனர்.
அல்லாஹ்வின் பாதையில் வீர மரணம் எய்திய ஷஹீ்துகள் "ரையான்" என்னும்பட்டுத் துணியின் மீது மகிழ்வுடன் கிடக்கின்றனர்.
பூவுகி்ல் அதிக நோன்பு நோற்றவர்கள், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இறைவனைத் தொழுதவர்கள், இவர்கள் எல்லோரும் ரைஹான் என்னும் ஆனந்த மலர்ச் சோலையில் பேரானந்தம் அடைகின்றார்கள்.
என்பதாகக் காட்சி நிலையிலும், "ஒருவரை ஒருவர் சந்தித்ததும் பிரிந்ததும் அல்லாஹ்வுக்கு அன்றி வேறல்ல" என்பதாகக் குரல் ஒலியிலும் மன்ணறையிலிருந்து மறுமொழி கிடைத்தது.
மரணத்திற்குப் பிறகு கூட வருவது எது?
1. மனிதன் செய்த அழியாத தர்மம்.
2. தன் வாழ்நாளில் அறிவில்லாத பிற மக்களுக்குப் புகட்டிய ஆதாரக் கல்வி.
3.அவனுக்காகத் தினந்தோறும் தொழுது மன்றாடி இறைவன்பால் கையேந்தி துஆ கேட்கும் சீலமிகு புதல்வர்கள்.
மௌல்வீ் ஏ.அப்துல்கனீ மன்பயீ எழுதியது.அனஸ் புக் சென்டர், 81,அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1-லிருந்து1992, 1993, 1995, 1996-ல் 4-ஆம் பதிப்பாக வெளியிட்டது.
Monday, December 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.