Thursday, November 19, 2009

தென்னிந்தியத் திருச்சபையு்ம் 18 கோடியும்:-


  • http://





  • சுனாமி மறுவாழ்வுப் பணிகள் தொடர்பாக
    மூன்று மாதங்களுக்கொருமுறை
    நிதி/விபர அறிக்கைகள் தரப்படாமை,
    நிதி குறித்த தணிக்கைக் கூட்டத்தில் பங்கேற்காமை, இவை குறி்த்த ஆய்வுக்கூட்டங்களை ரத்து் செய்தமை ஆகியவை ஒப்பந்தத்தை மீறியதானபடியால்,
    பல தடவைகளில் வழங்கப்பட்ட
    பதினெட்டுக் கோடியைத் திரும்பப்பெற்றுத்தரக்கோரி,
    சென்னை உயர்நீதி மன்றத்தில்,
    CSI- தென்னிந்தியத் திருச்சபை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    வழக்குத் தொடர்ந்தவர்கள்:
    EPISCOPAL RELIEF AND DEVELOPMENT TRUST, NEW YORK.


    தகவல் உதவி18-11-2009 தினமணி மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திகள்


    தமிழகத்தில் சத்து்ணவுத் திட்டம் காமராஜர் காலத்தில் அமுலுக்கு வந்தது. காமராஜர் விருப்பத்தைக் கல்வி அலுவலர் நெ.து்.சுந்தரவடிவேலு செயற்படுத்தினார். செலவு தொகையை அரசும்,உள்ளூர் அறச்சிந்தனை உடையோரும் பகிர்ந்து கொண்டனர்.

    பக்தியும் கல்வியும் வியாபாரமாக்கப்படுவிட்டது இந்தக்காலத்தில்!எனவே, சத்துணவுச் செலவுகளை ஈடுகட்ட அனத்துமத ஐக்கிய அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும், இந்து சமய அறநிலையத்து்றை உட்பட அனத்து மத நிறுவனங்ககளிடமிருந்தும் வருவாயில் ஒருபகுதி அந்த அமைப்பிற்கு வழங்கிட வழிவகை செய்தல் வேண்டும்.சத்து்ணவுக்கான செலவுகளை அனத்து் மத ஐக்கிய அமைப்பு கவனித்துக்கொள்ளும்.

    இவ்வாறு செய்தால், சத்துணவிற்கெனத் தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பட்ஜெட்டிலும் துண்டு விழாது. மக்கள் சேவைதானே மகேசன் சேவை?


    0 comments:

    Post a Comment

    Kindly post a comment.