Thursday, November 19, 2009

மு்தன்முதலில் சொத்துக் கணக்கைப் பகிரங்கமாக அறிவித்த நாமக்கல் மாவட்ட கலெக்டர்


  • http://


  • மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி உயர் அலுவர்கள் ஆண்டிற்கொரு முறை தங்களின் சொத்து விபரங்களைத் தெளிவாகக் காட்ட வேண்டும், என்பது சட்டம். இந்தவேலை ஒழுங்காக இயல்பாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், தற்பொழுது அது பகிரங்கமாக அறிவிக்கப்படுவதால் முக்கியத்துவம் பெறுகின்றது.

    தமிழ் நாட்டில் சென்ற மாதம் நாமக்கல்லில் ஓர் புரட்சி நடந்தது.நடத்தியவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம். என்ன செய்தார்? ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டத்தில், தனது குடும்பச் சொத்துக் கணக்கினை எடுத்துக்கூறினார்.

    தன் மனைவிக்கு அவரது தந்தையார் (மாமனார்) வாங்கித்தந்த வீடு, மதுரை தெற்கு வட்டம், ஆலம்பாளையம் பஞ்சாயத்து, பாண்டியன் நகர்,ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் இருப்பதைக் குறிப்பிட்டார்.ஆனால், அதுவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் கடனில் இருக்கிறதென்றும், மாதந்தோறும் ரூபாய்8500/- செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.
    வங்கியில் கையிருப்பு ரூபாய் 7172/-.

    "if you have power, use it for poor"- என்பதுதான் எனது கொள்கை என்று முழக்கமிடும்
    நாமக்கல் மாவட்ட ஆட்சியரை வாழ்த்தி வண்ங்குவோம்.ஈன்று புறந்தந்த அவர்தம் பெற்றோரையும் போற்றிடுவோம்.


    தலைவருக்குத் தெரிந்த பின்னர் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, வீட்டுவசதி வாரியத்திடம் திருப்பி்த்தரும் மாண்புகள், வருமானவரித்துறையிடமிருந்து விசாரணைக்கு அழைப்பு வரவில்லை என்று சொல்லும் முன்னாள் மு்தல்வர் போன்றோர் நாமக்கல்லாரைப் பின்பற்றுவார்களா?
    20 ஆண்டுகால உழைப்பில் இவ்வளவுதான் முடியும் என்று சொல்லும் கலெக்டர்,அவர்தம் துணைவியார், மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நீடுழி வாழ்க.

    2 comments:

    1. He is really a role model for all govt. employees

      ReplyDelete
    2. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களை வனங்குகிறேன்!!!!

      -த சேகர்

      ReplyDelete

    Kindly post a comment.