
சீட்டுக்கோ்-பதவிக்கோ-பேரம்பேச மாட்டோம் என்று இப்பொழுது முழங்குகின்றீர்கள்.
கர்ஜித்தவர்களே இங்கு சுற்றி அங்கு சுற்றிக் கடைசியில் காலில் விழுந்து கிடப்பது கண்டபின்னும் இந்தத் துணிச்சல் கூடவே கூடாதம்மா.
அடுக்குமொழிப் பேச்சுக்களிலும் அலங்கார வார்த்தைகளிலும் ஆட்சியைப் பிடித்தது ஒரு காலம். மக்கள் விழித்துக்கொண்டுவிட்டதால் இலவசங்களை அள்ளிவீசி ஏமாற்றிக்கொண்டிருப்பது இக்காலம்.இலவசங்களால் மக்களை ஏமாற்ற முடியாத காலம் உருவாகி வருகின்றது. இதைத் தொடரச் செய்து பயன்படுத்திட வேண்டியது நும் போன்றோர் கடமை.
பணபலம், அதிகார பலம்,அடியாட்கள் பலம், பத்திரிக்கைகள்-தொலைக்கட்சிகள் பலம் இவற்றையெல்லாம் மீறி எப்படி கட்சி நடத்தப் போகின்றீர்கள்?
தலித் துணைவேந்தர் நியமனம் இல்லை; தலித்களின் கடன்கள் தள்ளுபடி இல்லை; அரவாணிகளுக்கு வேலைவாய்ப்பும் தங்குமிட வசதியும் இல்லை; வண்ணார், பரியாரி, கைவினைக் கலைஞர்கள், நரிக்குறவர்கள் இட ஒதுக்கீடு இல்லை என்பதெல்லாம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நன்றாக இருக்கும். கட்சி நடத்தப் பணம் வேண்டும் அம்மா பணம் வேண்டும்.
சொல்லுவது எளிது; செயலாற்றுவது கடினம்; தாங்கள் ஒன்று் செய்யுங்கள். எந்தத் தொகுதிகளில் எல்லாம் வாய்ப்பு உள்ளதென்று தீர்மானியுங்கள். அந்தந்த்த் தொகுதிகளின் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக் கொள்ளுங்கள்.சுயேச்சைகளாகக் களமிறங்குங்கள்.
ஒரு 10 தொகுதிகள் திட்டமிடுங்கள். அகல உழுவதிலும் ஆழ உழுவது நிச்சயம் பயன் தரும்.
கட்சி அரசியலில் வெறுப்புற்று இருக்கும் நல்லோர் ஆதரவு், நடுநிலையாளர் அதரவு்,வாக்களிக்காமல் வீட்டில் இருப்போரது வாக்குகளைப் பெறு்வது முதலானவற்றில் முழுக் கவனம் செலுத்துங்கள்.
நிச்சயமாக ஓர் 5 MLA-க்களைப் பெற்றுவிட்டால், வெற்றி பெற்றவர்கள் விலை போகாமலிருந்தால், யார் அரி்யணையில் அமர்ந்தாலும், நீவிர் நினைத்ததச் சாதிக்கலாம். செலவும் குறைவு: அலைச்சலும் மிச்சம். வெற்றியும் நிச்சயம்.
உங்களால் முடியும் அம்மா.ஆம்! வெற்றி நிச்சயம். மக்கள் தயார்; தலைவர்கள் தயாரில்லை. அந்த வெற்றிடத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு வெற்றிமாலை சூடுங்கள். விகிதாச்சாரப் பிரதி்நிதித்துவத் தேர்தல் வரும்வரை இந்தமுறை கைகொடுக்கும். வெல்க. வாழ்த்துக்கள்.
நன்றி:ஜுனியர் விகடன். 22-11-2009.
0 comments:
Post a Comment
Kindly post a comment.