Friday, November 20, 2009

குழந்தைகள் திரைப்படம் "ஆனந்தி"- வளர் இளம் பருவ பாலியல் சலனங்கள்-தீர்வுகள்- இயக்கம்-ஞாநி


வாழ்க்கைக் கல்வியின் பத்து அடிப்படைத் திறன்கள் பற்றி் யதோர்குறும்படம் 18,19, நவம்பர்,2009-ல் விஜய் தொலைக்கட்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பானது.. நளந்தாவே நிறுவனத்திற்காக, ஞானபானு தயாரித்திருந்தது. பெண் குழந்தைகள் வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விதத்தைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. வளர் இளம் பருவத்தில் பெண்கள் ஆண்பாலினர் மேல் ஏற்படும் சலனங்களைப் பிரதிபலித்ததுக் காட்டியது. தீர்வும் சொன்னது,சிறப்பம்சம்.

பன்முகத் தி்றமையுடைய ஞாநி எழுதி, இயக்கியிருந்த இப்படத்திற்கு ஆனந்தி என்று பெயர் சூட்டியிருந்தார். ஆனந்தமான வாழ்க்கையைப் பெற்றிடப் பத்து வகைத் திறன்கள் மாணக்கருக்கு் அவசியம்தேவை என்பதைப் படம் வலியுறுத்தியது.

10-20 மாணாக்கர்களுக்கு நாசர் ஆசிரியராக வந்து பாடம் போதிக்கும் பாணியில் அமைந்திருந்தது. கதை சொல்லும் விதத்தில் காட்சிகளைக் கொண்டு சென்றது, ஞாநியின் அனுபவ முதிர்ச்சியினைக் காட்டியது. பிறந்ததிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு செயலையும் பற்றி யோசித்தால், அவை கோடிக் கணக்கில் வரும் என்ற எடுத்துக்காட்டுடன் வகுப்பைத்துவக்கினார், திரைத்துறைச் செல்வர், நாசர்.

1. நான் யார் என்பதில் தெளிவு.

2. உறவாடும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல்

3. உரையாடும் திறனைப் பெருக்கிக் கொள்ளுதல்.

4. தன்னைப்போல் பிறரையும் நினைக்கும் பண்பின் அவசியம்.

5. எதையு்மே ஏன்? எதற்கு என்று கேள்வி கேட்கும் தன்மை வளர்த்தல்.

6. அவற்றிலிருந்து எப்படி என்று பதில் தெரிந்து கொள்ளுதல்.

7. சிக்கல்களை எதி்ர்கொண்டு அவிழ்க்கத் தெரிந்து கொள்ளுதல்.

8 எதிலுமே உண்டு/இல்லை அல்லது வேண்டும்/வேண்டாம் -முடிவுசெய்தல்

9. உணர்ச்சிகளின் தன்மையைபுரிந்து கொண்டு செயல் படுதல்.

10. நவீனகாலச் சூழலில் மனத்தினை லேசாக வைத்துக் கொள்ளுதல்.

ஆகிய இந்த பத்துவிதத் தன்மைகளில் தேர்ந்துவிட்டால் வாழ்க்கை சிறக்கும்;
இனி்க்கும் . என தெளிவாகப் புரிந்து் கொள்ளச் செய்தார், ஆசிரியர்,நாசர்.

எல்லோருக்கும் தெரிந்த குரங்கு-முதலை நண்பர்கள் கதையை விவரித்தார்.
முதலை நட்புக்குச் செய்யவிருந்த துரோகச் செயலைக் குரங்கு திறமையாகச் செயல்பட்டு் உயிர் தப்பிய விததையும் எடுத்துச் சொன்னார். இக்கதையில்
பத்துவித வழ்வியல் தன்மைகள் பொருந்தி வருவதை சிந்திக்கச் சொன்னார்.

ஆனந்தி என்ற பருவமடைந்த சிறுமியின் உற்சாகமின்மயை ஆசிரியர் கண்டு கொண்டார். விசாரித்தார். காதல் வசப்பட்டிடிருப்பதே காரணமாயிருந்த்து.

எந்தெந்த வயதில் எதையெதைத் தெரிந்து கொள்ளவேண்டுமோ அதையதைத்
தெரிந்துகொண்டால் போதும் என்பதை எளிய உதாரணங்கள் மூலம் விளக்கினார்.

ஓடிப் போய்த் திருமணம் செய்துகொள்ள, காதலன், கார்த்திக் ஆனந்தியை அழைக்கின்றான். ஆசிரியரால், தெளிவு பெற்று விட்ட ஆனந்தி , தான் கலெக்டருக்குப் படிக்கப் போவதைச் சொன்னாள். பேப்பர் போட்டுப் பிழைத்திடும் கார்த்திக்கையும் மேலும் படிப்பதற்காகப் பணங்கட்டுமாறு சொல்கிறாள்.

இவ்வாறு, பத்தம்சப் பண்புகளால் வாழ்க்கை மேம்பாடு அடையும் என்பதை மாணாக்கர் புரிந்து தெளிவடைகின்றனர்.

பருவவயதுக் கோளாறு்களைத்தீர்த்திட வழிசொல்லும் கருத்தோட்டத்தில் கதையம்சம் சிறப்பாக இருந்தது.

ஸ்ரீவித்யா,ஜெகன்,விமல்,கல்பனா,ராம்குமார் ஆகியோருடன், பத்மா சாரங்கபாணிப் பள்ளி மாணவர்கள் நடித்திருந்தனர். ஸ்ரீதரன் ஒலிப்பதிவு. என்.சி. அனில் மொரீஷியஸ் தீவிலிருந்தபடியே இணையதளம் மூலமாகவே இசையமைத்திரு்ப்பது குறி்ப்பிடத்தக்கது.


காலத்திற்கேற்றபடத்தை எடுத்த நளந்தாவே அற நிறுவனத்தையும், ஞானபானுவையும், பங்கேற்றுச் சிறப்பித்த அனவரையும், இயக்குநர் ஞாநியையும் பாராட்டி மகிழ்வோம்.

குறும்படத்தின் CD ஒவ்வொரு வீட்டிலும் இரு்ப்பது அவசியமானதோர் விஷயம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.