
பூமியில் வி்ழுந்த பின்னும், மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்கின்றார்,மராட்டிய மாநில எம்.எல்.ஏ.
"வேலைவாய்ப்புத் தேர்வெழுதும் இடங்களில் எல்லாம், அதிரடிச் சோதனைகள் நடத்தினார்களாம்.மன்ணின் மைந்தரே பெரு்ம்பான்மையினராம்.எனவே, சும்மா இருந்துவிட்டார்களாம். மேலும், ஒவ்வொரு முறையும் வன்முறை நிகழ்த்துவதன் மூலம்தான் செயல்படவேண்டும் என்ற அவசியம் கிடையாது" என, திருவாய் மலர்ந்துள்ளார், மஹாராஷ்ட்ர எம்.எல்.ஏ; நிதின் சர்தேசாய்! ராஜ் தக்கரேயின், நவநிர்மாண் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்.
எழுத்தர் வேலைக்கான போட்டித் தேர்வை மும்பையில் நடத்த இருந்தது,STATE BANK OF INDIA, நி்ர்வாகம். நவ நிர்மாண் சேனாவினர் கூட்டமாகச் சென்று, மராத்தியர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பளிக்க வேண்டும்; இல்லையென்றால், தேர்வை நடத்தவிட மாட்டோம், என்று பாரத வங்கி அதிகாரிகளை மிரட்டிவிட்டு வந்துள்ளனர். இதில் இன்னொரு வேடிக்கை, தேர்வெழு்துவோர்க்குப் பாதுகாப்புத் தருவோம் என்று சிவசேனா கூறியது்தான்.
ஆனால், அச்சமின்றித் தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர், பாரத அரசு வங்கியின் உயர் அலுவலர்கள்.15-11-2009-ஞாயிறன்று தேர்வு நிகழ்ந்தது, மும்பையில்.சென்ற ஆண்டு நவநிர்மாண் சேனாவினர், ரயில்வே வேலை வாய்ப்புப் போட்டித் தேர்வின் போது ஆடிய திருவிளயாடல்களை இந்த ஆண்டு வங்கித் தேர்வில் நிகழ்த்த முடியவில்லை. /இயலாமையால் எழுந்த புலம்பல்தான் முதல் பத்தியில் கூறியுள்ளவை.
திறமையோடு செயற்பட்ட பாரத அரசு உயர் அதிகாரிகளையும், பாதுகாப்புக்குத் துணை செய்தவர்களையும் வாழ்த்தி வணங்கி் பாராட்டுவோம். இந்தி்ய தேசீயம் காக்கப்பட்டது மகிழ்ச்சிதானே நண்பர்களே!
0 comments:
Post a Comment
Kindly post a comment.