Showing posts with label சிறப்புத் தகவல்கள்i. Show all posts

Tuesday, April 17, 2012

இப்போது திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்று பிரிக்கப்பட்டுவிட்ட - ஒரு காலத்தில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த மாவட்டத்திலேயே தோன்றி, அதே மாவட்டத்தில் கடலில் கலக்கும் தனித்துவம் அப்போது தாமிரவருணி ஆற்றுக்கு இருந்தது. பொதிகைமலைச் சாரலில், தாமிரவருணி ஆற்றின் தண்ணீரைக் குடித்து அந்தத் தண்ணீரில் குளித்து வளர்ந்தவன் நான் என்பதால் என்னில் ஓடுவது தாமிரவருணி ரத்தமாக இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

இப்போது 'சத்யம்' தொலைக்காட்சியின் இணை ஆசிரியராக இருக்கும் எம். பாண்டியராஜன் 'தாமிரவருணி: சமூக-பொருளியல் மாற்றங்கள்' என்கிற புத்தகத்தை என்னிடம் தந்தபோது, பாவநாசம், விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு நினைவுகளில் நான் ஆழ்ந்தேன். எனக்கே தாமிரவருணியா, தாமிரபரணியா என்கிற குழப்பம் அடிக்கடி வருவதுண்டு. முனைவர் பழ. கோமதிநாயகத்தின் தேர்ந்த முடிவுக்குப் பின்னால் இனி 'தாமிரவருணி' என்றுதான் எழுதுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

தமிழக அரசில் பொதுப்பணித்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, பின் விருப்ப ஓய்வுபெற்ற முனைவர் பழ. கோமதிநாயகம் ஓர் அரசு அதிகாரியாக வாழாமல் சமூகப் போராளியாக வாழ்ந்து மறைந்தவர். தமிழகப் பாசனப் பிரச்னைகள் பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவான, தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய விடையை அளித்தவர் அவர் மட்டுமே என்று துணிந்து கூறலாம். நீர்நிலைகள் பாதுகாப்பு, மணற்கொள்ளை போன்ற பிரச்சினைகளில் அவர் முழுமையான போராளியாகவே இயங்கினார்.

'தமிழக பாசன வரலாறு' 'தமிழகம்... தண்ணீர்... தாகம் தீருமா?' 'பெரியாறு அணை மறைக்கப்பட்ட உண்மைகள்', 'தமிழக ஆறுகளில் மணற்கொள்ளை' என்று பல பயனுள்ள புத்தகங்களைத் தமிழகத்துக்கு அளித்திருக்கும் பழ. கோமதிநாயகம் தாமிரவருணியைத் தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். அந்த முனைவர் பட்ட ஆய்வின் அடியொற்றி, அதை ஒரு நூலாக்கி பழ. கோமதிநாயகத்தின் இரண்டாவது நினைவு நாளில் வெளிக் கொணர்ந்திருக்கிறார் பாண்டியராஜன்.

1970இல் பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் தனிச்சிறப்பே தாமிரவருணிதான். இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தாமிரவருணி பொதிகை மலையிலிருந்து தோன்றி, 125 கி.மீ. தூரம் தவழ்ந்து மன்னார் வளைகுடாவில் கலக்கிறது.

தமிழில் மிகப் பழமையான சங்க இலக்கியங்கள், இந்த நதியை 'பொருநை' என்று குறிப்பிடுகின்றன. அதன் தற்போதைய பெயருக்கும் அதன் தோற்றத்துக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. வடமொழியில் 'தாமிர' என்றால் செம்பு அல்லது சிவப்பு என்று பொருள். 'பர்ண' என்றால் இலை. வர்ண என்றால் நிறம். செம்பு அல்லது சிவப்பு நிற ஆறு என்பதைக் குறிக்கும் விதமாகத் 'தாமிரவருணி' என்று பெயர் வந்திருக்கக்கூடும்.

தாமிரவருணி, மணிமுத்தாறு ஆறுகளைச் சுற்றி- அவற்றை மையமாக்கிக் கொண்டு நடந்த வளர்ச்சிகள், பயிர்ச் சாகுபடியில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றுக்கான காரணங்கள், வெவ்வேறு சாதிகளும் பிரிவினரும் வெவ்வேறு விதமாகத் தண்ணீரைக் கைப்பற்ற நடத்திய போராட்டங்கள் என்று தாமிரவருணி பற்றிய முழுமையான ஓர் ஆய்வு பழ. கோமதிநாயகத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வு வெறும் ஆய்வறிக்கையாக முடங்கிவிடாமல் அதை ஒரு புத்தகமாக வெளிக்கொணர்ந்திருப்பதற்குப் பாண்டியராஜனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாணதீர்த்தம் அருவியில் குளித்த நிறைவு.

- கலாரசிகன்

நன்றி : 'தினமணி' 25-3-12

சமூகப் போராளியாக வாழ்ந்த பழ. கோமதிநாயகம்

Saturday, January 21, 2012

புதுதில்லி,ஜன.20: வோடஃபோன் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ.11,000 கோடி வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

ரூ.11,000 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

3 நீதிபதிகள் பெஞ்ச்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திர குமார் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

அபிஷேக் மனு சிங்வி: வோடஃபோன் நிறுவனம் சார்பில் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.

வெளிநாட்டில் நடந்த பரிமாற்றம்:வெளிநாட்டில் நடந்த வர்த்தகப் பரிமாற்றம் மீது நிர்வாக அதிகாரம் செலுத்தும் உரிமை நமக்கு இல்லை என்பதால் இந்திய வருமானவரிச் சட்டப்படி வரிப் பிடித்தம் செய்யத் தவறியது ஏன் என்று கேட்டு அந்த நிறுவனத்திடம் வசூலிக்க முடியாது என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது.

ரூ.11,000 கோடி திரும்ப ஒப்படைப்பு: இந்த வழக்கை நடத்துவதற்கு முன்னால் விதிக்கப்பட்ட நிபந்தனைப்படி வோடஃபோன் நிறுவனம் செலுத்திய ரூ. 2,500 கோடியை 2 மாதங்களுக்குள்ளாக 4% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் பெஞ்ச் உத்தரவிட்டது. உத்தரவாதத் தொகையாக அந்த நிறுவனம் செலுத்திய ரூ.8,500 கோடியை 4 வாரங்களுக்குள் அந்த நிறுவனத்திடமே திருப்பித்தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்துக்கும் உத்தரவிடப்பட்டது.

வோடஃபோன் நிறுவனம் 2007-ம் ஆண்டு மே மாதம் ஹட்சிசன் - எஸ்ஸார் குழுமத்தின் 67% பங்குகளை சுமார் ரூ.56,000 கோடி கொடுத்து வாங்கியது. இந்த நடவடிக்கையை ஒட்டியே அந்த நிறுவனம் அதனுடைய ஊழியர்களுக்கு அளித்த ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்திருக்க வேண்டிய ரூ.11,000 கோடியைத் தர வேண்டும் என்று இந்திய வருமானவரித்துறை வழக்கு தொடுத்தது.

பல கட்டங்களுக்குப் பிறகு இப்போது இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பிரணாப் அவசர ஆலோசனை: நிதி நெருக்கடி கடுமையாக இருக்கும் இந்த வேளையில், வருமான வரித் துறைக்குக் கிடைத்திருக்க வேண்டிய பெருந்தொகை கையைவிட்டுப் போகிறதே என்ற கவலையில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத்துடன் தில்லியில் சனிக்கிழமை மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. அப்போது என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

நிருபர்களைச் சந்தித்த சல்மான் குர்ஷீத் இந்த வழக்கின் தீர்ப்பை ஆழ்ந்து படித்துப் பார்த்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

வோடஃபோன் மகிழ்ச்சி: இந்தத் தீர்ப்பினால் வோடஃபோன் நிறுவனம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்ய வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு நம்பிக்கையை அளிக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்வி பாராட்டு: இந்திய நீதிமுறை நடுநிலையானது, திறமை மிக்கது என்பது மீண்டும் ஒருமுறை பறைசாற்றப்பட்டிருக்கிறது என்று அபிஷேக் மனு சிங்வி பாராட்டு தெரிவித்தார்.

ரூ.11,000 கோடி வருமானவரி செலுத்த வேண்டாம்: வோடஃபோன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Friday, October 28, 2011

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மூன்றாவது நாளாக இன்று பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது.

பிரதான இராஜதந்திரிகள், நாட்டின் பிரதிநிதிகளையே ஓரிரு மணித்தியாலங்கள் சந்தித்துப் பேசுகிற போக்கையுடைய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சந்திப்பை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

புதன்கிழமை ஆரம்பித்த இந் சந்திப்புக்கள் நேற்று வியாழக்கிழமை மாலை வரை நடைபெற்றதாகவும், இன்று வெள்ளிக்கிழமையும் இச்சந்திப்பு நடைபெற உள்ளதாகவும் வொஷிங்டனில் உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவித்தனர்

இன்று முக்கிய சந்திப்புக்கள் இடம்பெற இருப்பதாகவும், இந்த சந்திப்பின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுக்களை முடித்துக்கொண்டு இன்றிரவு கனடாவிற்கு செல்லும் இக்குழுவினர் 31ஆம் திகதி கனடிய வெளிவிவகார திணைக்கள அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர்

இக்குழுவினர் மீண்டும் வொஷிங்டனுக்கு சென்று நவம்பர் முதலாம் திகதி செவ்வாய்கிழமை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம பான் கீ மூனை சந்திக்க உள்ளனர்.

இதன் பின்னர் இக்குழுவினர் ஐரோப்பாவிற்கு பயணமாகின்றனர். பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இவர்கள் அங்கும் சில இராஜதந்திர சந்திப்புக்களில் கலந்து கொள்ள உள்ளனர்.

அமெரிக்க இராஜதந்திரிகளுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சந்திப்பு இன்று 3ஆவது நாளாக தொடர்கிறது!