Friday, October 28, 2011

அமெரிக்க இராஜதந்திரிகளுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சந்திப்பு இன்று 3ஆவது நாளாக தொடர்கிறது!


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மூன்றாவது நாளாக இன்று பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது.

பிரதான இராஜதந்திரிகள், நாட்டின் பிரதிநிதிகளையே ஓரிரு மணித்தியாலங்கள் சந்தித்துப் பேசுகிற போக்கையுடைய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சந்திப்பை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

புதன்கிழமை ஆரம்பித்த இந் சந்திப்புக்கள் நேற்று வியாழக்கிழமை மாலை வரை நடைபெற்றதாகவும், இன்று வெள்ளிக்கிழமையும் இச்சந்திப்பு நடைபெற உள்ளதாகவும் வொஷிங்டனில் உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவித்தனர்

இன்று முக்கிய சந்திப்புக்கள் இடம்பெற இருப்பதாகவும், இந்த சந்திப்பின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுக்களை முடித்துக்கொண்டு இன்றிரவு கனடாவிற்கு செல்லும் இக்குழுவினர் 31ஆம் திகதி கனடிய வெளிவிவகார திணைக்கள அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர்

இக்குழுவினர் மீண்டும் வொஷிங்டனுக்கு சென்று நவம்பர் முதலாம் திகதி செவ்வாய்கிழமை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம பான் கீ மூனை சந்திக்க உள்ளனர்.

இதன் பின்னர் இக்குழுவினர் ஐரோப்பாவிற்கு பயணமாகின்றனர். பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இவர்கள் அங்கும் சில இராஜதந்திர சந்திப்புக்களில் கலந்து கொள்ள உள்ளனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.