Thursday, April 20, 2017

கடலோடியின் கம்போடியா நினைவுகள் - கே. ஆர். ஏ. நரசையா


----- Forwarded Message -----
From: Wednesday Study Circle Gandhi Study Centre <wednesdaystudycircle@gmail.com>
To: mushivalingam@yahoo.co.in 
Sent: Monday, April 17, 2017 12:08 AM
Subject: அழைப்பு - காந்தி கல்வி நிலையத்தின் இந்த வார புதன் வாசகர் வட்டம் 19.04.17

வணக்கம்,காந்தி கல்வி   நிலையத்தின் இந் வார  புதன் வாசகர்  வட்டத்தில் 19.04.17 அன்று  மாலை 6.45 முதல் 7.45  வரை  
திரு கி.மோகன் வர்கள்  “கடலோடியின் கம்போடியா நினைவுகள்”  என்ற K.R.A.நரசய்யா அவர்களின் நூலை அறிமுகம் செய்து பேசுகிறார்.  னைவரும் வருக!!!
 
 
திரு கி. மோகன் அவர்கள், வேதியியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது காந்தி கல்வி நிலையத்தின் தலைவராக உள்ளார். காந்தியடிகளின் செய்தியினை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே கொண்டு செல்வதை தன்னுடைய வாழ்வின் பணியாக கொண்டுள்ளார்.
 
ஆசிரியர் மற்றும் புத்தகம் பற்றி:

திரு K.R.Aநரசய்யா அவர்கள் அதிகம் அறிமுகம் தேவையில்லாத தமிழ் ஆளுமைகளுள் ஒருவர். எண்ணற்ற சிறுகதைகளையும், "சொல்லொணாப் பேறு"  "கடல்வழி வணிகம்"  "மதராசப்பட்டினம்" "கடலோடியின் கம்போடியா நினைவுகள்" என  பல புகழ்பெற்ற நூல்களை எழுதியவர். மேற்குறிப்பிட்ட அனைத்து நூல்களும் பல விருதுகளை பெற்றவை. மேலும், இந்தியக் கடற்படையிலும், விசாகப்பட்டினத்  துறைமுகத்தில்  தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றியவர். உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்று பணியாற்றியவர்.
 
 
இந்நூலின் ஆசிரியர் திரு K.R.A. நரசய்யா அவர்கள் உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்று பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட ”புதுகைத் தென்றல்” என்ற இதழில் இரண்டு வருடங்களுக்கு தொடர்க் கட்டுரைகளாக எழுதியுள்ளார். பின்னர் 2009 - ஆம் ஆண்டில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் அக்கட்டுரைகள் நூலாக வெளியிடப்பட்டது. கம்போடிய நாட்டை குறித்து தமிழில் இப்படியொரு நூல் இதுவரை வந்ததில்லை என்னும் அளவுக்கு மிகச் சிறந்த நூல் இது. அங்குள்ள நம் ரத்த சம்மந்தமுள்ளவர்கள் பற்றியும் அவர்களின் நாடு, இன்பம், துன்பம், பெருமை மற்றும் சிறுமை என எல்லாவற்றையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். 
 
இடம்
காந்தி கல்வி நிலையம்,தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58, வெங்கட நாராயண  சாலைதிகர்,சென்னை-17
தொடர்புக்கு: 044-24346549 () 9790740886

__._,_.___

Posted by: R Gopu <writergopu@yahoo.com>

0 comments:

Post a Comment

Kindly post a comment.