Thursday, April 20, 2017

சீர் கொடுத்து அசத்திய ஊர் மக்கள் :நாகை அரசுப் பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று: !




கோடிக்கணக்கான ரூபாய் மதிப் பீட்டில், பிரம்மாண்டமாக தனியார் நடத்தும் கல்விச் சாலைகளுக்கே கிடைக்காத ஐ.எஸ்.ஓ. தரச்சான்று நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கிடைத்துள்ளது. சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பள்ளி, அதன் தலைமையாசிரியரும் தேசிய நல்லாசிரியருமான பாலுவால் மிக விரைவாக மீண்டு வந்து, தற்போது பல பெருமைகளுக்கு உரியதாக விளங்குகிறது.

அனைத்து வகுப்பறைகளும் டைல்ஸ் பதிக்கப்பட்டும், வண்ண மயமாகவும், மடிக்கணினி, வெண் திரை, ஒலி அமைப்புகளைக் கொண்டதாகவும் திகழும் இப்பள்ளிதான் மாநிலத்தில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்ட முதல் அரசுப் பள்ளி என்ற பெருமைக்கு உரியது.

யோகா, கராத்தே வகுப்புகள், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி, கையெழுத்துப் பயிற்சி, கணினி பயிற்சி, இந்தி வகுப்பு, ஓவியம், உடற்கல்வி வகுப்புகள் என பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இப்பள்ளி தற்போது ஐ.எஸ்.ஓ. தரச்சான்றும் பெற்றுள்ளதற்கு அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்கின்றனர்.

இப்பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற விழாவில் ஆட்சியர் பழனிசாமியிடம் கெஸ்ட் சர்ட்டிபிகேஷன் நிறுவன இயக்குநர் கார்த்திகேயன் ஐ,எஸ்.ஓ. தரச்சான்றை வழங்கினார். பள்ளிக்கு தரச்சான்று கிடைத்திருக் கும் மகிழ்ச்சியை அவ்வூர் பொது மக்கள் கொண்டாடிய விதமும் முன்னுதாரணம்தான். தங்கள் ஊர்பள்ளிக்கு தங்களால் முடிந்த பொருட்களைச் சீர் அளித்து அசத்தி விட்டார்கள். பீரோ, மேஜை, மின் விசிறி, டியூப் லைட், மின்சார மணி உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய்க்கான பொருட்களைச் சீராக எடுத்துக்கொண்டு, மேளதாளத் துடன் ஊர்வலமாக வந்து பள்ளி யில் ஒப்படைத்தனர்.

பள்ளியில் மாடித் தோட்டம்

ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறும் விழாவுக்கு வந்த ஆட்சியருக்கு அடுத்த ஆச்சரியத்தையும் இப்பள்ளி அளித்தது. கடற்கரை ஓரம் உள்ள இப்பள்ளியின் மண்ணில் சிலவகை செடிகள் வளராது என்ப தால், பள்ளியின் மாடியில் ஷெட் அமைத்து மாடித் தோட்டத்துக்கும் வித்திட்டிருக்கின்றனர். மாடித் தோட் டத்தில் விதைகளைத் தூவியும், சில வகை கன்றுகளை நட்டும் தோட்டத்தைத் திறந்துவைத்தார் ஆட்சியர். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பன்னீர்செல்வம், குமரன், நேதாஜி நற்பணி மன்றம், ஜூமான்ஜீ நண்பர்கள் ஆகியோரின் உதவியுடன் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாடித்தோட்டத்தில் மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பூச்செடிகளை வளர்க்க திட்டமிட்டி ருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்புகளுக்கும் காரணமாக விளங்கும் தலைமையாசிரியர் பாலுவுக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத் தமைக்கு ஆட்சியர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் விழாவில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். ஆசிரியர்கள் நினைத்தால் அரசுப் பள்ளியிலும் பல சாதனைகளைச் செய்ய லாம் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.