Saturday, November 12, 2016

பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், வாழ்க! வளர்க!


பிரம்மகான சபா 

09-11-2016 புதன்கிழமை மாலை
நியூஉட்லண்ஸ் ஹோட்டல், மயிலாப்பூரில்

டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் 
அவர்களின்

வழிகாட்டும் கதைகள், தென்னிந்தியப் பிரமுகர்கள், சிகரம் தொடு

நூல்கள் வெளியீட்டு விழாவின்போது

வாசித்தளித்த பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை !

வரவேற்புரை 

 டாக்டர் ஆர்.நடராஜன் அவர்கள்

தலைமை-நூல்வெளியீடு-சிறப்புரை 

: டாக்டர் வெ.இறையன்பு
ஐ.ஏ.எஸ். அவர்கள்

முதல்பிரதி பெற்று வாழ்த்துரை

டாக்டர் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன்
ஐ.பி.எஸ். (ஓய்வு)அவர்கள்
(செயலாளர், பி.எஸ்.எஜுகேஷல் சொஸைட்டி,சென்னை)

ஏற்புரை 

பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்




பாட்டிற்கு  பாரதி - இது படித்தது
பட்டிற்கு மட்டுமல்ல 
பாட்டுக்கும் பல்வேறு கலைகளுக்கும்
“நல்லி” என்றே ஆனது!

பட்டு தரும் பணத்தை
பாட்டுக்குத் தருபவர்!
கலையை, கலாச்சாரத்தை
பண்பாட்டை - உலகிற்குக் காட்டுபவர்!
அதனால்தான்
கர்நாடக இசை உலகில் இவருக்குத் தனி POWER!

சபாக்கள் பலவற்றின் தும்பிக்கை நீ!
சங்கீத உலகின் முழு நம்பிக்கை நீ!
வளரும் கலைஞர்களுக்கு வசந்தம் நீ!
வறியவர் பலர் கண்ணீர் துடைக்கும் கைக்குட்டை நீ!

ஆறெழுத்து சுருங்கி மூன்றெழுத்தானது
“நல்லிதயம்” என்பதே “நல்லி” என்றானது!

எத்தனை தொழில்கள் செய்கிறாய்!
எப்படி உனக்கு நேரம் கிடைக்கிறது?

கொஞ்சம்  அதிசயம் தான்!
நீ மட்டுமே அறிந்த ரகசியம் தான்!

நெசவுக் குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ
நூலை இணைப்பது போல
தொழில், கலை, மக்கள், சமூகப்பணி
புத்தகப்பணி, இலக்கியம், இசை என்று இணைத்து
அத்தனையும் பாவுகட்டி, பல்லு வேலைப்பாடாய்ப் பளபளக்கிறாய்!

தரம், நியாயமான லாபம், குறித்த நேரத்தில் தருவது
என்ற “தாரக மந்திரத்தை”
தினசரி “காயத்ரி மந்திரமாகியதால்”
தாத்தா ”சின்னசாமி” பெயரை உயர்த்தி ”பெரியசாமி”  ஆக்கிவிட்டாய்!

வளமை இருந்தால் எளிமை இணைவது சற்றே கடினம்!
இரண்டும் இங்கே இணைந்தது ஒரு புதிய புதினம்!

வில்லி பாரதத்தில் கண்ணன் தந்தது ஒரு கூறை!
நல்லி பாரதத்தில் நீ குவலயத்திற்கு தருவது எத்தனை கூறை?

அடுத்த பிறவியிலாவது அகிலம் போற்றும்
சங்கீத வித்வானாகப் பிறக்க ஆசைப்பட்டாய்!

தடுத்துச் சொன்னார், செம்மங்குடி
வேண்டவே வேண்டாம் -
அதற்குப் பிறப்பார்கள் ஆயிரம் பேர்!
ஆதரிக்கும் வள்ளலாய் யார் பிறப்பார்?

எடுக்கும் பிறவியெல்லாம் ஆதரிக்கும்
நல்(லி) வள்ளலாய்ப் பிறந்து
நீயே வாழ்விக்க வேண்டும்
கலையை என உரைத்தார்!

“நல்லிசை”யால் வாழ்த்தப்பட்ட “நல்லியே” நீ வாழ்க!
உனது பிறந்த நாளில் வாழ்த்தி வணங்கும்,

முனைவர், கவிஞர், தென்காசி  கணேசன் ( L& T )
94447 94010 / 90470 99982 நாள் : 09-11-2016

நிகழ்ச்சி

மாலை 6 மணி - இசை அரங்கு : திரு.அபிஷேக் ரகுராம் குழுவினர்
இரவு 7 மணி - நூல்கள் வெளியீடு இரவு 8 மணி -விருந்து

 நிரலில் உள்ளபடியே நேரந்தவறாமல் 
நிகழ்ச்சி துவங்கி இனிது நிறைந்தது
பாராட்டத்தக்கதோர் சிறப்பம்சம்.






  

0 comments:

Post a Comment

Kindly post a comment.