Thursday, November 10, 2016

சென்னை வந்தடைந்தன புதிய 500,2000 ரூபாய் நோட்டுகள்..!





புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 200 கோடி ரூபாய் சென்னை வந்தடைந்துள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இன்று முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்றிரவு அறிவித்தார்.மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் புழக்கத்தில் விடப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

தேவைக்கேற்ப புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும்,அவை நாட்டிலுள்ள பல்வேறு வங்கிகளின் தலைமை அலுவலகங்களுக்கு விநியோகம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி,தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்பதால்,மக்கள் கொடுக்கும் பழைய நோட்டுகளுக்கேற்ப நாளை புதிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்படும்.இதற்கான சுமார் 200 கோடி புதிய நோட்டுகள் சென்னை வந்தடைந்துள்ளன.இந்த 200 கோடி ரூபாய் ஒவ்வொரு வங்கிகளுக்கும் பிரித்தளிக்கப்படும்.மேலும் ஏ.டி.எம் மையங்களில் உள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்படும்.

இதன் பின்னர் வங்கிகள் மக்களிடமிருந்து வாங்கிய பழைய நோட்டுகளின் எண்ணிக்கைக்கேற்ப,புதிய நோட்டுகள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.இதனால் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு,புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழங்கத் துவங்கும்.

http://tamil.samayam.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.