கறுப்பு பணத்தை ஓழிக்கவேண்டும் என்றால் ரூபாய் நோட்டுகளுக்கு எக்ஸ்பிரியாகும் தேதி வைத்தாலே போதும் என்று சிறுவர்கள் ஐடியா வழங்கியதாக பிரபல பத்திரிக்கையாளர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பத்திரிக்கையாளரான ஞாநி சங்கரன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்" மோடி அறிவித்ததை விட சிறந்த திட்டத்தை ஒரு பள்ளி மாணவர் சில மாதங்கள் முன்பு என்னிடம் சொன்னார். எல்லா பொருட்களுக்கும் எக்ஸ்பையரி டேட் இருப்பது போல ரூபாய் நோட்டுக்கும் எக்ஸ்பையரி டேட் அச்சிடவேண்டும்.
எக்ஸ்பையரி ஆகும் சமயத்தில் வங்கியில் போய் புது நோட்டு மாற்றிக் கொள்ளலாம். ஒரு நோட்டு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரைதான் செல்லுபடியாகும் என்று நிர்ணயிக்கலாம். இந்த நடைமுறையில் எல்லா பணமும் பகிரங்கக் கணக்குக்கு வந்தே ஆகவேண்டியிருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.