சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாளை மருதுபாண்டியரின் 215-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து வரும் 27-ம் தேதி காளையார்கோவிலில் உள்ள அவரது சமாதியில் குருபூஜை விழா நடைபெற உள்ளது. மேலும் வரும் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை விழா நடக்க உள்ளது.
இதனால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மலர்விழி பிறப்பித்துள்ளார்,
0 comments:
Post a Comment
Kindly post a comment.