Friday, October 21, 2016

கவனகக்கலை - தோழர் திலீபன் - சில பகிர்வுகள்



                                 
தமிழ், தமிழர்,தமிழினம், தமிழர்நலன், தமிழ்நாடு என்றெல்லாம் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். செயல் அளவில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என நமக்குநாமே வினா எழுப்பி விடைகாண வேண்டும். பார்ப்பனர்களிடம் இருக்கும் சிறுசிறு திறன்களையெல்லாம் ஊதிஊதிப் பெரிதாக்கி பார்ப்பன ஊடகங்கள் நம்மிடையே கொண்டுவந்து சேர்ப்பித்துவிடும். அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி; காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி. இதில் பார்ப்பனர்களைக் குறைசொல்லும் நாம் நம்மளவில் சரியாக இயங்குகிறோமா என எண்ணிப்பார்க்க வேண்டும். வியக்கத்தக்க ஆற்றல் பெற்ற பலர் நம்மிடமும் மிகுந்துள்ளனர்.  அப்படிப்பட்டவர்களில் காரைக்குடியில் அரசுப்பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றும் தோழர் தங்கச்சாமியின் மகன் தோழர் திலீபனும் ஒருவர். 22 அகவையேயான இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்று வருகிறார். பாடநூல்களோடு பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய நூல்களையும் பெருவிருப்பத்தோடு படிக்கிற பேரார்வம் மிகுந்தவர். நினைவாற்றல் கலையான கவனகக் கலையில் வல்லவர். பதினாறு வகையான கவனகங்களை மேடையில் நிகழ்த்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர். இவரைத் தமிழ்ச்சமூகத்தில் பெரிய அளவில் கொண்டுசேர்க்க வேண்டிய பெரும்பொறுப்பு நமக்கு இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதுபோன்ற ஆற்றலெல்லாம் ஆண்டவன் அருள் இருந்தால்தான் கிடைக்கும்  எனக் கதையளந்து கொண்டிருக்கும் காலச்சூழலில் தம்பி திலீபனும் அவரின் தந்தை தோழர் தங்கச்சாமியும் கடவுள்மறுப்பாளர்கள் என்பது நமக்கு மகிழ்வளிக்கக்கூடியது. அவரைப்பற்றிப் பரப்பவேண்டிய பெருங்கடமை நம்முன்னே உள்ளது. புதுமனை புகுவிழா, திருமணம் போன்ற இல்ல விழாக்கள் பள்ளி, கல்லூரி விழாக்கள் போன்றவற்றிற்கு அழைத்து பதினாறு கவனக நிகழ்ச்சியினை நடத்தச் செய்யலாம்.  இவரின் கவனகக்கலை நிகழ்ச்சியின் காணொளிக் குறுவட்டினை (DVD) 5, 10, 20 என வாங்கி உறவினர்கள், நண்பர்கள், தோழர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். இவரைப்பற்றிய செய்திகளை அச்சிட்டுப் பரப்பலாம். நம்மாலியன்றதைச் செய்வோம்.   

தொடர்புக்கு... அலைப்பேசி எண்கள் 7502272075, 9486562716 
இணையதளம்: www.thirukkuraldhileeban.in  
மின்னஞ்சல்: thirukkuraldhileeban @gmail.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.