சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ் தெலுங்கானாவின் கரீம்நகரில் பிறந்தவர் ஆவார். தமிழக ஆளுநராக கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர் ரோசய்யா.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதும் காங்கிரஸ் ஆளுநர்கள் அனைவரும் மாற்றப்பட்ட நிலையில் ரோசய்யா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பதவியில் தொடர்ந்தனர். இந்நிலையில் ரோசய்யாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவருக்கு பதில் மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் என்று குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.
நன்றி :- தினகரன்
w
0 comments:
Post a Comment
Kindly post a comment.