ஜப்பானில் லயன்ராக் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் லயன்ராக் என்ற புயல் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை, வெள்ளத்தால் விமான மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. வெள்ளத்தால் இவாய்சுமி நகரில் உள்ள முதியோர் இல்லம் மூழ்கியதில் அங்கிருந்த 9 பேர் பலியானதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இவாதே என்ற மகாணத்தில் குஜி என்ற இடத்தில் வெள்ளப்பெருக்கில் 2 பேர் அடித்து செல்லப்பட்டனர். பல இடங்களில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி போயுள்ளனர். மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ளம் காரணமாக ஜப்பானின் ஹாக்கைடோ தீவில் பலர் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
நன்றி :- தினத்தந்தி
0 comments:
Post a Comment
Kindly post a comment.