Monday, August 29, 2016

மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்களும் நுழையலாம் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு



புதுடில்லி, ஆக.27 மும்பையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய ஹாஜி அலி அறக்கட்டளை தடை விதித் துள்ளது.

இந்த தடையை எதிர்த்து ஜாகியா சோமன், நூர்ஜஹான் நியாஸ் ஆகிய இருபெண்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந் தனர்.    இதற்கிடையில், சில வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து புகழ்பெற்ற கோயில்களில் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தி வரும் பூமட்டா ரன்ராகினி பிரிகேட் அமைப்பின் தலை வர் திருப்தி தேசாய், கடந்த மே மாதம் ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைந்தார். எனினும், தர்காவின் மய்யப் பகுதிக்குள் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை.


ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழைவதற்கு மராட் டிய மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதமே ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், மேற்படி பொதுநல மனு தொடர்பான வழக்கில் விசாரணையை முடித்திருந்த மும்பை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் வி.எம்.கான்டே மற்றும் ரேவதி மோஹித் டேரே அடங்கிய மும்பை உயர்நீதி மன்ற அமர்வு, ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி உத்தரவிட் டுள்ளது.

ஹாஜி அலி தர்காவுக்குள் நுழையக் கூடாது என பெண் களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையானது இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 14,15,19 மற்றும் 25-க்கு எதி ராக அமைந்துள்ளதாகவும், ஆண்களுக்கு நிகராக பெண் களும் அந்த தர்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் நீதிபதி கள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தர்காவுக்கு செல்லும் பெண்களுக்கான பாது காப்பை மராட்டிய மாநில அரசும், தர்கா குழுவியினரும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இந்த தீர்ப்பை எதித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள் ளதாக தர்கா குழுவினர் தெரிவித்துள்ளதால் தங்களது உத் தரவை நடைமுறைப்படுத்த ஆறுவார இடைக்காலத் தடை விதிப்பதாகவும் குறிப்பிட் டுள்ளனர்.

நன்றி :- விடுதலை

0 comments:

Post a Comment

Kindly post a comment.