நாகர்கோவில்: ரோடு பணிகளுக்கு அனுமதி தரமறுப்பதால் நகராட்சி தலைவி கவுன்சிலர்களுடன் மூன்றாவது நாளாக அலுவலகத்துக்குள் போராட்டம் நடத்தி வருகிறார்.
நாகர்கோவில் நகராட்சி பா.ஜ., வசம் உள்ளது. இங்கு தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக குழாய்கள் புதைக்கப்பட்ட ரோடுகளை சீரமைக்க எட்டு கோடி ரூபாய் செசலவில் டெண்டர் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகளை மன்றக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறாமல் நகராட்சி ஆணையர் இழுத்தடித்து வருகிறார்.
கவுன்சிலின் பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில் ஆளும் கட்சி தரப்பில் பிரஷர் கொடுத்து வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பணிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க கோரி தலைவி மீனாதேவ் தலைமையில் அதிமுக தவிர்த்த இதர கவுன்சிலர்கள் கடந்த வெள்ளி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். நேற்று மூன்றாவது நாளாக போராட்டம் நீடித்தது. நகராட்சி தலைவியின்
இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க., எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். பா.ஜ., தலைவர்களும் அங்கு செசன்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதுகுறித்து மீனாதேவ் கூறுகையில், பணிகளுக்கு அனுமதி தரும் வரை போராட்டம் நடைபெறும் என்றும், இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
நன்றி :- தினமலர்

0 comments:
Post a Comment
Kindly post a comment.