Wednesday, August 31, 2016

சென்னை கெல்லீஸில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு ரூ.2.5 கோடியில் புதிய கட்டிடம்!



சென்னை கெல்லீஸில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு ( The Kelly's government observation home ) ரூ.2.5 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று விதி 110-ன் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் வரு மாறு:

சமூக நலத்துறையின் சார்பில் சென்னை, கடலூர், தஞ்சாவூர், சேலம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 9 அரசு சேவை இல்லங்கள் செயல்படுகின்றன. இந்த இல்லங் களில் தங்குவதற்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

அதேபோல இடைநிலை ஆசிரியை பயிற்சிக்கான மாணவியர் சேர்க்கை, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களிலும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரமாக உள்ளது. இந்த உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும். இதனால் அதிக பயனாளிகள் பயனடைவர்.

மாநில அரசு நிதியுதவியுடன் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் பயனடையும் முதி யோர் களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் ரூ.300-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழகத்தில் அரசால் 6 கூர் நோக்கு இல்லங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஒரு கூர்நோக்கு இல்லமும் நடத்தப்படுகின்றன. சென்னை கெல்லீஸில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்ல கட்டிடம் பழுதடைந்துள்ள காரணத்தால் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒருபுதிய கட்டிடம் கட்டப்படும். இதில் தங்கும் அறைகள், சமையல் அறையுடன் கூடிய உணவு அருந்தும் கூடம், தொழிற்பயிற்சிக் கூடம், வகுப்பறைகள் உள்ளிட்ட சிறார்களை நல்வழிப்படுத்து வதற்கான அனைத்து உட் கட்டமைப்பு வசதிகளும் இருக் கும்.

நவீன வெப் ஆப்செட்

சென்னை உயர் நீதிமன்றத்தின் அச்சுத் தேவைகளை பூர்த்தி செய்ய 1923-ம் ஆண்டு முதல் உயர் நீதிமன்ற வளாகத்தில் அரசு கிளை அச்சகம் செயல்படுகிறது. இந்த அச்சகத்தில், உயர் நீதிமன்றத்தால் நாள்தோறும் வெளியிடப்படும் வழக்குப் பட்டியல்கள், வார மற்றும் மாத வழக்கு பட்டியல்கள், நீதிமன்றப் பயன்பாட்டுக்கு தேவைப்படும் 708 வகையான படிவங்கள் மற்றும் பதிவேடுகள் அச்சிடப்படுகின்றன.

இங்கு தற்போது பயன்பாட்டில் உள்ள ‘வெப் ஆப்செட்’ இயந்திரம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்டதால், அன்றாடப் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தினந்தோறும் மாலையில் பெறப்படும் சுமார் 400 பக்கங்கள் கொண்ட வழக்கு பட்டியலையும், பிற அச்சுப் பணிகளையும் தாமதமில்லாமல் அச்சிட்டு வழங்க சென்னை உயர் நீதிமன்றக் கிளை அச்சகத்துக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்தில் நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய புதிய வெப் ஆப்செட் இயந்திரம் ஒன்று கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

 நன்றி :இந்து  தமிழ் நாளிதழ்

0 comments:

Post a Comment

Kindly post a comment.