Tuesday, November 10, 2015

INDIA TO SEVELOP 5 G TECHNOLOGY !


5G தொழில்நுட்பத்தை 2020-க்குள் கொண்டு வர உலகம் முழுவதும் பல முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இதற்கு பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் வர்த்தக ரீதியாக இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வர பல ஆண்டுகள் ஆகும். ஏற்கனவே, நோக்கியா நெட்வோர்க்ஸ் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வர சீனாவுடன் கைகோர்த்துள்ளது. 

இந்நிலையில், உள்நாட்டிலேயே 5G தொழில்நுட்பத்தை உருவாக்க மத்திய ஐடி அமைச்சகம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அத்துறை சார்ந்த வல்லுனர்களுக்கு நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை இந்திய ஐடி அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் கன்வர்ஜென்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - பிராட்பேண்ட் டெக்னாலஜிஸ் வரவேற்றுள்ளது. இந்த நிதியுதவியானது பணமாகவோ அல்லது நேரடியாக ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் விதமாகவோ இருக்கலாம். 

5G தொழில்நுட்பம் வந்தால் இண்டர்நெட்டின் ஸ்பீடு பூஸ்ட் ஆகும். மொபைல் வீடியோ கான்பரன்சிங், கிளவுட் கம்ப்யூட்டிங், நிலையான இண்டர்நேஷனல் கால்கள், தடையில்லாத டேட்டா காலிங் சர்வீஸஸ் போன்ற வசதிகள் எளிமையாக கிடைக்கும். ஒப்பிட முடியாத அதிவேகத்தால் இன்றைக்கு போட்டோக்கள் இருக்கும் இடத்தை வீடியோக்கள் விரைவில் பிடிக்கும் நிலை உருவாகும். 

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.