Tuesday, November 10, 2015

உலகத்து இயற்கை - புறநானூறு

 
போரும்  அமைதியும்

வேண்டிய  குடும்பத்திற்கு  தீபாவளிக்கு  முதல்நாள்  ஓர்  உயிர்  இழப்பு  ஏற்பட்டது.  தீபாவளி  அக்குடும்பத்திற்கும்  அவரைச்  சார்ந்தோர்க்கும்  மகிழ்ச்சியைப்  பறித்தது.  இன்ப  துன்பங்கள்  தொடர்கதையாகத்தான்  இருக்கும். ஓரிடத்தில்  இன்பம்  நிகழும்போது  பிறிதோரிடத்தில் துன்பமும்  நிகழ்வது  உலக  இயல்பு.  அதனை  நினைவூட்டும்  புறநானூற்றுப்  பாடல்  பின்வருமாறு:

ஓரில்  நெய்தல்  கறங்க,  ஓரில்

ஈர்ந்தண்  முழவின்  பாணி  தழும்பப்

புணர்ந்தோர்  பூவணி  அணியப்,  பிரிந்தோர்

பைதல்  உண்கண்  பனிவார்பு  உறைப்பப்,

படைத்தோன்  மன்ற,  அப்  பண்பிலாளன்!

இன்னாது  அம்ம,  இவ்வுலகம்,

இனிய  காண்க.  இதன்  இயல்புணர்ந்  தோரே.

பாடியவர்:   பக்குடுக்கை  நன்கணியார்
திணை : பொதுவியல்  துறை ;  பெருங்காஞ்சி    

0 comments:

Post a Comment

Kindly post a comment.