Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.

Thursday, November 19, 2015

வெள்ள மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள்

உணவு இல்லாமல் தவித்த குடும்பத்தினரை 
ரப்பர் படகில் மீட்டுவரும் 
 தீயணைப்புப் படை வீரர்கள். |
 படம்: ம.பிரபு

சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து ஒரே நாளில் 15,000 பேர் மீட்பு


சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் நேற்று வரை 22 ஆயிரம் பேரை மீட்டுள்ளனர். வில்லிவாக்கத்தில் மட்டும் நேற்று 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக சென்னை யில் மழைநீர் தேங்கிய பகுதிகளில், வீடுகளில் இருந்த பொதுமக்களை மீட்க, காவல்துறை, தீயணைப்புத் துறை, பேரிடர் மீட்பு படை, கட லோர காவல்படை என ஆயிரக் கணக்கான வீரர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றினர். இதனால், மூன்று மாவட்டங்களிலும் 70 ஆயி ரம் பேர் பத்திரமாக மீட்கப்பட் டுள்ளனர்.

தீயணைப்புப் படை வீரர்களைப் பொறுத்தவரை, மீட்புப் பணிகள் தவிர, முறிந்து விழுந்த மரங்களை அகற்றுதல், வீடுகளுக்குள் நுழைந்த விஷ ஜந்துக்களை பிடித்தல் என பல்வேறு பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில், சென்னையில் வெள்ள மீட்புப் பணிகளுக்காக கூடுதலாக 300 வீரர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப் பட்டுள்ளனர். இலகு ரக படகுகள், கயிறு, தண்ணீர் இறைக்கும் இயந் திரம், தீயணைப்பு வாகனம் ஆகிய வற்றுடன் சென்னைக்கு வரும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து,த் தீயணைப்புத் துறை இணை இயக்குனர் எஸ்.விஜயசேகர் கூறியதாவது:

சென்னையில் 700 வீரர்கள் உள்ளனர், தற்போது வெளிமாவட்டங்களில் இருந்து 300 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. 120 கமாண்டோ படையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை 43 குழுக்களாக பிரிந்து, 33 இடங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், வில்லிவாக்கம் பகுதியில் மீட்புப் பணி தொடங்கியது. இப்பகுதியில் மட்டும் மாலை வரை 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
]
வில்லிவாக்கம் பகுதியில் மழை நீர் வடிகால்கள் இல்லாததால், சிலபகுதிகளில் 4 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களை 120 தீயணைப்பு வீரர்கள், 12 படகுகளில் சென்று மீட்டு வருகின்றனர். பேரிடர் மீட்பு குழுக்களும் இப்பகுதியில் பணியாற்றி வருகின்றனர். சென்னை முழுவதும் மீட்புப் பணிகளுக்காக 35 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிகளவில் மழை நீர் சூழ்ந் துள்ள பகுதிகளில், மாடி வீடுகளில் குடியிருக்கும் சிலர் பாதுகாப்பு கருதியும், குழந்தைகள், பெரியவர் களை பாதுகாக்கவும் அங்கிருந்து வருவதில்லை. அவர்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு பொருட்களை நாங்கள் வீரர்கள் மூலம் வாங்கி அளித்து வருகிறோம். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தற்போது பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.