Thursday, November 19, 2015

.கூகிள் சுந்தர் பிச்சைக்குக் ஆபாசத் தடுப்பு வசதிக் கோரிக்கைக் மின்மடல் அனுப்புவோம்! காட்டுமிராண்டித்தனமான கதைகளைத் தமிழில் கணினியில் எழுதும் துன்மார்க்கர்கள் தமிழினத் துரோகிகளே !


கூகிள்  ஆபாசத்தளங்களைத்  கணினியில் பார்க்காமலிருப்பதற்குரிய  வசதியை ஆங்கில மொழிக்கு மட்டுமே  ஏற்படுத்தியிருக்கின்றது.  2009 நவம்பரில் !கணினியில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோர் மட்டும் ஆரோக்கிய உள்ளத்துடன் வாழ்ந்தால்  போதுமென்று கூகிள்  எண்ணுகின்றது.

வேறு வேலையற்ற நிலையில் காட்டுமிராண்டித்தனமான கதைகளைத் தமிழில் கணினியில் எழுதும் துன்மார்க்கர்கள்  தமிழினத் துரோகிகளே ! 
தமிழ் செய்த பாவம் தமிழர்களுக்குத் தாய் மொழியாய் அமைந்தது என்பார் ஈரோடு தமிழன்பன்., அது உண்மைதானே ?

அனைத்து  நாடுகளுக்கும்  அமெரிக்கா  எப்படி சட்டம் பிள்ளையாகத  திகழ்கின்றதோ  அதே  வழியியிலேயே க்கு கூகிளும் பீடு நடை போடுகின்றது. அமெரிக்காவின்  வன்முறைக்கு ஆலவட்டம் போடுகின்ற ஐரோப்பிய நாடுகளும் பாதுகாப்பின்றித்  தத்தளித்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டால் போதும் .அமைதிப்படைக்கு அனைத்து உறுப்பினர் நாடுகளும்  தங்களது நாடுகளிலிருந்து இராணுவ வீரர்களை  அனுப்பியே தீரவேண்டும். இவ்வகையில் உயிர்நீத்த  வீரர்களைப் பற்றியோ அவர்கள் குடும்பங்களைப் பற்றியோ நாம்  எப்போதாவது எண்ணிப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் உயிர்நீத்த நம் இந்திய / தமிழ்நாட்டு  வீரர்களைப் பற்றியாவது கவலைப்பட்டதுண்டா?

தி.மு.க.வும் , பா.ஜ. வும் தத்தம் பங்கிற்கு ஆளுக்கொரு கோடி கொடுத்துப் பாவக்கறையைக் கழுவிக்கொள்ள முற்பட்டுள்ளனர். இது யார் வீட்டுப் பணம்.? மக்கள் குரல் டி. ஆர். ஆர். இன்று இல்லை. இருந்திருந்தால்  தி.மு.க. வின் ஊழல் பட்டியல் கட்டுரையாக  வந்திருக்கும். யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ? அடைந்தால் திராவிடநாடு இல்லாவிட்டால் சுடுகாடு ;காகிதப்பூ மணக்காது; காங்கிரஸ் அமிர்தம் இனிக்காது என்றவர்கள் – கடவுள் இல்லை என்று கோஷமிட்டவர்கள் – கொள்கையையும் கோலத்தையும் மாற்றிக்கொண்டு தமிழ் நாட்டிலும் மத்தியிலும் சுகபோகங்களை அனுபவித்துவிட்டனர். அதன் பலன் இன்றும் தொடர்கின்றது.  தமிழ் வலம் வந்த ஸ்டாலின் செலவு கணக்கைக் காட்டுவாரா ? யார் செலவு செய்தால் என்ன ?

வாக்களிக்க மறுத்து ஓ போடுங்கள் என்று ஆரம்பித்த முழக்கங்களும், அது ஒருமாதிரியாகத் நடைமுறைப்படுத்தியதும் மக்களைத் திசை திருப்புவதற்காகத்தான் என்றே தோன்றுகின்றது. அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் ஒரே ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள். வாதிகளைத் தேசிய மயமாகியபின் தேர்தலை நடத்துங்கள். இல்லை என்றால் அதுவரை இருப்பவர்களே அட்சியில் இருக்கட்டும். தேர்தல் நடத்தினால் ஆட்கள் மாறகூடும். நிலைமைகள் சற்றும் மாறாது.

ஆபாசங்களை அரங்கேற்றத சினிமாக்களும் தொலைக்காட்சிகளும் போதும். கணினிகளும்  அதோடு சேர்ந்து கொள்ள வேண்டாம். ககிளைப் புறக்கணிக்க இயலாது. மாற்றங்கள் நிகழும் வரை ஆங்கிலத்திற்கு வழங்கியிருக்கும் வசதியையேனும் தமிழ் உள்ளிட்ட பிற உலக மொழிகளுக்கும் கூகிள் ஏற்படுத்தித்தரட்டும். உலகமேங்கும் வாழும் பிற மொழியினர் அனைவரும் ஓங்கிக் குரலெழுப்புவோம்.

சீனமும், ஜப்பானும் கூகிளைப் புறந்தள்ளிவிட்டன. “பைடு” வைப் பயன்படுத்துகின்றன. ஆனால் அவற்றிலும்  ஆபாசத்திற்குக் குறைவில்லை.

என்ன செய்யப்போகின்றோம் நாம் ?     

கூகிளின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் நம்மவருக்குக்  கடிதங்கள் அனுப்புவோம். கோரிக்கையை வலியுறுத்துவோம்.  
vashiva@mit.edu    
        .  

            

0 comments:

Post a Comment

Kindly post a comment.