Wednesday, November 25, 2015

தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம்: தூத்துக்குடியில் பாதிப்புகள் அதிகம்

குற்றாலம் பிரதான அருவியில் கடும் சீற்றத்துடன் வெள்ளம் பாய்கிறது. அருவிக்கு அருகே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பிரதான அருவியில் கடும் சீற்றத்துடன் வெள்ளம் பாய்கிறது.


 அருவிக்கு அருகே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி யில் பெய்த கனமழையால் தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தூத்துக் குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பாபநாசத் தில் 177 மி.மீ. மழை பதிவானது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதி களில் நேற்று முன்தினம் இரவில் கனமழை கொட்டியதால் குற் றாலம், மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அவற்றில் குளிக்கவும், அப்பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி, கடனா, ராமநதி, சிற்றாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து, நேற்று காலை 121.30 அடியாக உள்ளது. அடவிநயினார் அணை தொடர்ந்து 3-வது ஆண்டாக நிரம்பி வழிகிறது. களக்காடு தலையணையில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பி அண்ட் டி காலனி, இந்திரா நகர் பகுதிகளை நேற்று 2-வது நாளாக வெள்ளம் சூழ்ந்திருந்தது. அங்குள்ள மக்களுக்கு படகுகள் மூலம் உணவு வழங்கப்பட்டது. அந்தோணியார்புரம், சோரீஸ்புரம், டூவிபுரம், 3-ம் மைல் போன்ற பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. 35-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

அந்தோணியார்புரம் பகுதியில் 1 கி.மீ. தொலைவுக்கு தூத்துக்குடி நெல்லை தேசிய நெடுஞ்சாலை அரிக்கப்பட்டுள்ளது. மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 6 நிவாரண முகாம்களில் 2,500 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். நிவாரண உதவிகள் கேட்டு நேற்று பல இடங்களில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் ஆகியோர் சமாதானம் செய்தனர்.

Keywords: தாமிரபரணி, கரைபுரளும் வெள்ளம், தூத்துக்குடியில் பாதிப்புகள் அதிகம்

தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.