Monday, November 23, 2015

ஐ.எஸ். அமைப்பை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் எப்படிப் பார்க்கின்றன?

இஸ்லாமிய அரசு அமைப்பை 

உலகில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் 

எதிர்மறையாகவே பார்க்கின்றன 

என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. 

ஒரே ஒரு நாடுதான் விதிவிலக்கு.



இஸ்லாமிய அரசு என்ற அமைப்பை, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் வசிக்கும் மக்கள் பொதுவாக எதிர்மறையாகவே பார்க்கிறார்கள் என்று சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
ப்யூ ஆராய்ச்சி மையத்தின் உலக மனோபாவங்கள் குறித்த ஆய்வு ஒன்று பாலத்தீன நிலப்பரப்புகள், ஜோர்டான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தீவிரவாத அமைப்பை நிராகரிக்கிறார்கள் என்று காட்டியது. அதேபோல இஸ்ரேலில் வசிக்கும் அரேபியர்களில் 91 சதவீதத்தினர் சாதகமற்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர்.
லெபனானில் இந்த அமைப்புக்கு எதிரான கருத்து ஏறக்குறைய 100 சதவீதத்துக்கு நெருக்கமாகவே இருக்கிறது. இந்த ஆய்வு சமீபத்தில் பெய்ரூட்டில் நடந்த குண்டுத்தாக்குதல்களுக்கு முன்னர், 2015 வசந்த காலத்தில் நடத்தப்பட்ட நிலையிலும்கூட இந்த கருத்துணர்வு அப்படி இருந்திருக்கிறது.
லெபனானில் இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஏறக்குறைய எல்லா கிறித்தவர்களும், ஷியா பிரிவு முஸ்லீம்களும் இஸ்லாமிய அரசு அமைப்பைப் பற்றி எதிர்மறையான கருத்தையே கொண்டிருந்தார்கள். அதே போல சுன்னி லெபனானியர்களிலும் கூட 98 சதவீதத்தினர் அந்த அமைப்பை ஆதரிக்கவில்லை.

0 comments:

Post a Comment

Kindly post a comment.