Friday, November 6, 2015

இந்திய வம்சாவளியினருக்கு கனடாவில் பதவி


ஒட்டாவா,:கனடாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ருடிவ் தலைமையிலான அரசில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.கனடாவில், கடந்த மாதம் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஜஸ்டின் ட்ருடிவ் தலைமையிலான, லிபரல் கட்சி, 182 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. 

இதையடுத்து, ஜஸ்டின் ட்ருடவ், நேற்று முன்தினம், கனடாவின், 23வது பிரதமராக பதவியேற்றார். அவருடன், 30 அமைச்சர்களும், பதவி ஏற்றுக் கொண்டனர்.அவர்களில் நான்கு பேர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். சீக்கியர்களான, ஹர்ஜித் சாஜன்,42, பாதுகாப்பு துறை அமைச்சராகவும், நவதீப் பெய்ன்ஸ், 38, புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு துறை அமைச்சராகவும், அமர்ஜீத் சோஹி, அடிப்படை கட்டமைப்பு துறை அமைச்சராகவும், இளம் பெண், பர்திஷ் சாகர், சிறு வியாபாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். இந்தியாவில் பிறந்த ஹர்ஜித் சாஜன், ஐந்து வயதில், பெற்றோருடன், கனடாவிற்கு குடிபெயர்ந்தார். வான்கூவர் தெற்கு எம்.பி.,யான இவர், கனடா ராணுவத்தில், லெப்டினன்ட் கர்னலாக இருந்தவர். 
ஆப்கன், போஸ்னியா போர்களில் பங்கேற்றவர்.ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கையில், 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடவ் புதிய நிலைப்பாட்டை பின்பற்ற உள்ளார்.

இதில் ஹர்ஜித் சஜன், முக்கிய பங்கு வகிப்பார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.

நன்றி :-தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.