Wednesday, November 11, 2015

நாளை முதல் ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் ரத்து செய்தால் மட்டுமே பணம் கிடைக்கும்


நாளை முதல் ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் ரத்து செய்தால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும்




ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்கள் மற்றும் ஏஜென்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

அதைத் தடுக்கும் வகையில் முன்பதிவு ரெயில் டிக்கெட் ரத்து மற்றும் கட்டணம் திருப்பி அளிப்பதில் வழிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனை நாளை (12–ந் தேதி) முதல் ரெயில்வே துறை அமல்படுத்துகிறது.

ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும் போது 2–ம் வகுப்பு இருக்கை வசதி உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டிற்கு ரூ.30 முன்பு பிடித்தம் செய்யப்பட்டது. இனி அது ரூ.60 ஆக உயர்த்தப்பட்டு பிடித்தம் செய்யப்படும்.

3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கான பயணச்சீட்டுக்கு தற்போது ரூ.90 பிடித்தம் செய்யப்படுகிறது. நாளை முதல் இது ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ரூ.60–ல் இருந்து ரூ.120 ஆகவும், ரூ.2–ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு ரூ.100–ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே கட்டணம் திருப்பி அளிக்கப்படும். ரெயில் புறப்பட்ட பின் டிக்கெட் ரத்து செய்தால் பணம் திரும்ப பெற முடியாது. 

காத்திருப்போர் பட்டியல், ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகளைப் பொறுத்தவரை ரெயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் பணம் திருப்பி அளிக்கப்படும்.

அதன் பின்னர் ரத்து செய்தால் கட்டணம் திருப்பி பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.