Tuesday, November 17, 2015

சென்னையை 22 ஆம் தேதி புயல் தாக்கும் : சொல்கிறது பஞ்சாங்கம்

தமிழகத்தில் பெய்த மழையையை பற்றியும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும் ஏற்கனவே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


 
 
வானத்தில் சுழலும் நவகிரகங்களின் இயக்கம், அதனால் உலகில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை தொடர்பான குறிப்புகள் அடங்கியதுதான் பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில், முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர். தங்களின் கணிப்புகளை சுலோகங்களாக எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.
 
இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் ஜாதகம் கணிப்பது, எதிர்கால பலன்களைச் சொல்வது போன்றவற்றை ஜோதிடர்கள் செய்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முனிவர்கள் எழுதிய சுலோகங்களின் அடிப்படையில் எழுதப்படுவது “வாக்கிய பஞ்சாங்கம்”. அந்த பஞ்சாங்கத்தை இப்போது பல்வேறு ஜோதிடர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.
 
அதில், அக்டோபர் 14 ஆம் தேதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.    
 
மேலும் அந்த பஞ்சாங்கத்தில் வருகிற 21ஆம் தேதி(சனிக்கிழைமை) தொடங்கி ஒரு வாரம் மழை பெய்யும் எனவும், 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு புயல் பலமாக சென்னையை தாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அது உண்மையா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

http://www.tamil.webdunia.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.